/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
தான்சானியா தமிழ் சங்கப் பொங்கல் விழா
/
தான்சானியா தமிழ் சங்கப் பொங்கல் விழா

தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பாக பொங்கல் விழாவை விமர்சையாக கொண்டாடினர். தமிழ் சங்கத் தலைவி ரமாதேவி சங்கரன், துணைத் தலைவி அனுராதா சந்தோஷ் ஏற்பாட்டின் பேரில் மாலை ஐந்து மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கி சிறார் மற்றும் ஆடவர்களின் பாடல், நடனம் ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஓவியம் தீட்டுதல், கோலப்போட்டி, உறியடி, திருக்குறள் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளில் பங்கு பெற்ற மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
புகைப்படம் எடுப்பதற்காக அமைக்கப்பட்டு இருந்த கிராம, ஜல்லிக்கட்டு, பெட்டிக்கடை அரங்குகளில் தமிழ் சொந்தங்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நானூறுக்கும் மேற்பட்ட தமிழ் சொந்தங்கள் விழாவில் கலந்து சிறப்பித்தனர். தான் சானியா இந்திய தூதரகத்தின் உயர் ஆணையர் பிஸ்வதிப் தேவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இரவு அறுசுவை உணவுடன் விழா நிறைவுற்றது.
சங்க நிர்வாகிகள்: தேன்மொழி கோவந்தன், விஜிமணி, கீதா சங்கரநாராயணன், பார்வதி ஸ்ரீதர், வருணா அருண், வீணா ஜானகிராமன், சரண்யா அன்புமணி, செல்வி சகாயராஜ், சீதாலட்சுமி சதீஷ், அபிஷா மெரிசன்
- நமது செய்தியாளர் தானேஷ் ராஜா
Advertisement