/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
பினாங்கு மாநில அரசு ஆதரவில் 11-வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு
/
பினாங்கு மாநில அரசு ஆதரவில் 11-வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு
பினாங்கு மாநில அரசு ஆதரவில் 11-வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு
பினாங்கு மாநில அரசு ஆதரவில் 11-வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு
ஜன 07, 2025

பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக 11-வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு ஜனவரி 4, 5 தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இம்மாநாட்டில் பினாங்கு மாநில முதலமைச்சர் செள கோன் ய்யூ தொடங்கி வைத்து பினாங்கு மாநிலத்தில் தமிழர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அதற்கு சாட்சிகள் இங்கிருக்கும் கட்டிடங்களும் கோயில்களும் என்றும் இது போன்ற மாநாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் சிறப்புரை ஆற்றினார்.
துணை முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜக்தீப் சிங் கலந்து கொண்டு இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இருக்கும் தொடர்பு இன்னும் அதிகரிக்கும் என்று உரையாற்றினார்.
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் வந்திருக்கக்கூடிய தமிழர்களை இணைப்பது பொருளாதாரம், வர்த்தகத்தில் முன்னேற்றுவது பெண்களுக்கு தலைமைத்துவத்தில் சிறந்து விளங்க அவர்களுக்கு வழிகாட்டுவதே மாநாட்டின் குறிக்கோள் என்று அவர் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தர்ராஜீ சோமு மலேசியாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பையும் வர்த்தக தொடர்பையும் வரலாற்று ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி இந்த மாநாடு அடுத்த ஆண்டும் பினாங்கு மாநிலத்தில் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் மேலும் தமிழர்கள் மலேசியாவிற்கு வாழ வந்தவர்கள் அல்ல ஆள வந்தவர்கள் என்று சொன்னதும் மாநாட்டிற்கு வந்தவர்கள் தங்கள் கரங்களை தட்டி வரவேற்றனர்.
இந்த மாநாட்டில் ஆட்சி குழு உறுப்பினர் வாங் ஹான் வை பேசும்போது தமிழகத்திற்கும் பினாங்கிற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நேரடி விமான சேவை வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் என்றும் இன்னும் பல புதுமைகளுக்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என்றும் பேசினார்.
பினாங்கு மாநிலத்தின் மேயர் டத்தோ ஸ்ரீ ராஜேந்திரன் தமிழ் வம்சாவளி அமைப்பை வாழ்த்தி தான் தமிழ் வம்சாவளி என்றும் கொஞ்சும் தமிழில் பேசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.தமிழக பிரமுகர்களும் பங்கேற்றனர்.
இரண்டாம் நாள் வர்த்தக நிகழ்வில் நூற்றாண்டு பழமை மிக்க மலேசிய பினாங்கு வர்த்தக சங்கத்தின் தலைவர்டத்தோஸ்ரீ பார்த்திபன் தலைமை உரை ஆற்றினார். மலேசிய இந்திய வர்த்தக சங்கத் தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் நாராயண சாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் இரண்டாவது நாள் மலேசிய வர்த்தக சங்கமும் இந்திய வர்த்தக சங்கமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டார்கள் இது தொழில் மிகப் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த ஒப்பந்தத்தை மலேசியா வர்த்தக சங்கத்தின் தலைவர் பார்த்திபனும் செல்வகுமாரும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஒப்பந்தம் கையொப்பம் இட்டனர்.
உணவு இடைவேளைக்கு பிறகு சென்னையில் இருந்து வந்திருந்த தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனங்களை பற்றிய காணொளியை ஒளிபரப்பி விளக்கினர்.
பிற்பகல் 3 மணிக்கு மேல் நடைபெற்ற மகளிர் தலைமைத்துவம் மாநாட்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியம் மற்றும் மலேசிய வர்த்தக மகளிர் பிரிவு தலைவி ஹேமலா சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் சுஜிதா பெண்கள் தலைமைத்துவத்தை அடைந்தாலும் குடும்பம் ஒழுக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருவது குறித்து சிறப்புரை சிறப்புரை ஆற்றினார். முன்னாள் பிரதமத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தேவமணி மகளிர் மேம்பாட்டு தலைமைத்துவ மாநாட்டை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு நன்றியுரை கவிஞர் ரவி பாரதி வழங்கினார் மேலும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளை ஜான் தன்ராஜ் தொகுத்து வழங்கினார். இம்மாநாட்டில் வர்த்தக கண்காட்சியை அநேகர் பார்த்து மகிழ்ந்தனர் மேலும் இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா நாங்கள் நாட்களில் மறக்க முடியாத நிகழ்வு என்று பினாங்கு வா தமிழர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
- தினமலர் வாசகர் செல்வகுமார்
Advertisement