/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
தாய்லாந்து பேங்காக்கில் நகரத்தார் பிள்ளையார் நோன்பு
/
தாய்லாந்து பேங்காக்கில் நகரத்தார் பிள்ளையார் நோன்பு
தாய்லாந்து பேங்காக்கில் நகரத்தார் பிள்ளையார் நோன்பு
தாய்லாந்து பேங்காக்கில் நகரத்தார் பிள்ளையார் நோன்பு
ஜன 06, 2025

காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதியை சுற்றி உள்ள பகுதிகளை பூர்வீகமாக கொண்ட நகரத்தார்களுக்கு உரிய முக்கிய விழாவாகவும், மிகவும் தொன்மையான விழாவாகவும் கொண்டாடப்படுவது பிள்ளையார் நோன்பு விழாவாகும்.
இந் நோன்பு திருக்கார்த்திகையில் இருந்து 21 ம் நாளாகவும், சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் கூடி வரும் நன்னாளில், மாலை வேளையில் அனுஷ்டிக்கப்படுகிறது. முதல் நாள் வீட்டை கூட்டி மெழுகி, மாவிலை தோரணம் நட்டு, நோன்பு அன்று நடுவீட்டில் கோலமிட்டு, அப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளை பணியாரம், கந்தரப்பம், மோதகம், கொழுக்கட்டை, சீடை என பல்வேறு லகையான பலகாரங்களுடன், ஐந்து வகையான பொரிகளை விநாயகருக்கு படைத்து வழிபடுவர்.
வீட்டில் அமர்ந்திருப்போரின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, கருப்பட்டி பாகையும் அரிசி மாவையும் கொண்ட கலவையால் செய்யப்பட்ட சேர்க்கையில், 21 நூலிலைகள் கொண்ட திரியை இணைத்து, வந்திருக்கும் ஆண்களில் வயதில் மூத்தவர் அதை தீபத்தில் ஏற்றி கொடுக்க, கலந்து கொள்ளும் அனைவரும் விநாயகப் பெருமானை வணங்கி வாங்கி உண்டு மகழ்கின்றனர்.
அவ்வாறான சிறப்பான பிள்ளையார் நோன்பு, இந்தியாவில் மட்டுமல்லாது கடல் கடந்து வாழும் நகரத்தார் பெருமக்களும், தங்கள் பாரம்பரியத்தை போற்றும் வகையில் வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தாய்லாந்து வாழ் நகரத்தார்கள் அனைவரும் ஒன்றுகூடி வலையபட்டியைச் சார்ந்த சொர்ணவல்லி சுப்பையா இல்லத்தில், சிறுகூடல்பட்டியைச் சார்ந்த சரவணன் அழகப்பன் இழை எடுத்துக் கொடுக்க, தேவகோட்டை, கடியாபட்டி, குழிபிறை மற்றும் குருவிக் கொண்டான்பட்டியைச் பூர்வீகமாக கொண்ட நகரத்தார் பெருமக்கள் நோன்பு கடைப்பிடித்தனர். கலந்து கொண்ட ஆச்சிமார்கள் பதினாறு வகை பதார்த்தங்கள் செய்து, பார்த்தாலே பசி தீரும் அளவிற்கு செய்திருந்தது பாராட்டுக்குரியது. படிக்கும் அனைவருக்கும் பிள்ளையார் படியளக்கட்டும்.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement