/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
திருகோணமலை ரொட்டறி கழக 46 வது “தொடக்க ஆண்டு” விழா
/
திருகோணமலை ரொட்டறி கழக 46 வது “தொடக்க ஆண்டு” விழா
மே 05, 2025

திருகோணமலை ரொட்டறி கழக 46வது “தொடக்க ஆண்டு” (Charter Day) விழா திருகோணமலை ரோட்டரி இல்லத்தில் நடைபெற்றது.. 2026-_-27 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஆளுநர் குமார் சுந்தரராஜ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். தலைவர் PHF எஸ்.ஜெகதீஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். மறைந்த முன்னாள் ரோட்டரி அங்கத்தவர்களை நினைவு கூறப் பட்டார்கள்
திருகோணமலை ரோட்டரி கழகத்தின் முன்னாள் பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் வரலாற்றையும், நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுயநலத்திற்கு அப்பாற்பட்டு சேவை செய்த பன்னிரண்டு சிறந்த ரோட்டரி அங்கத்தவர்களை கௌரவிக்கப்பட்டனர்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வு முடிவுகளில் சிறந்து விளங்கிய தி சண்முகா இந்து மகளிர் கல்லூரியை சேர்ந்த ஸ்ரீகுமார் டிலுக்சனாவுக்கு ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மூன்று பயனாளிகளுக்கு சுயதொழில் செய்வதற்கான மிதிவண்டிகள் பிரதம விருந்தினரால் வழங்கப்பட்டன.
2026_-27 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஆளுநர் குமார் சுந்தரராஜ் திருகோணமலை ரோட்டரியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய உரையை நிகழ்த்தினார். அடுத்த வருட தலைவர் கே. பிரபாகரன் நன்றி உரை நிகழ்தினார்.
- நமது செய்தியாளர் டாக்டர் ஜி.குணாளன்
Advertisement