/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
இலங்கையில் துபாய் வாழ் தமிழருக்கு விருது
/
இலங்கையில் துபாய் வாழ் தமிழருக்கு விருது
டிச 17, 2024

கொழும்பு : கல்லிடைக்குறிச்சி (துபாய்) முனைவர் ஆ.முகம்மது முகைதீனுக்கு' பிரான்ஸ் சர்வதேசத் தமிழ் வானொலியின் சார்பாக சிறந்த தமிழ்த் தொண்டர் விருது வழங்கப்பட்டது.
இலங்கை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலியின் (ஐ.டி.ஆர்) 28-ஆவது ஆண்டு நிறைவு விழா, சர்வதேச தமிழ் வானொலியின் நிறுவனத்தலைவர் சரவணையூர் விசு.செல்வராசா தலைமையில் இலங்கை, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் தேசியக் கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும் துபாய் வாழ் தமிழருமான முனைவர் ஆ.முகமது முகைதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கும், சிறந்த ஆளுமைகளுக்கு பரிசுகளையும் விருதுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தேசியக் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ஆ. முகமது முகைதீனுக்கு சிறந்த தமிழ்த் தொண்டர் என்ற விருது வழங்கப்பட்டது. முனைவர் ஆ. முகமது முகைதீனின் சமூகப் பணிகளையும் கலைப் பணிகளையும் கல்வி மற்றும் தமிழ்ப் பணிகளையும் பாராட்டி, இலங்கையில் உள்ள பூமணி அம்மா அறக்கட்டளையின் சார்பில் அந்நிறுவனத் தலைவரும் பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலியின் நிறுவனத் தலைவருமான சரவணையூர் விசு.செல்வராசா, தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இணைந்து இவ்விருதினை வழங்கி கௌரவித்தனர்.
தமிழ் மொழி, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து அரும்பணியாற்றி வரும் முனைவர் முகைதீனுக்கு அயல்நாட்டில் வழங்கப்பட்ட இந்த விருது மேலும் அவருக்கு உத்வேகம் அளிக்கும் என்பது திண்ணம். இவ்விருது பெற்ற முனைவர் ஆ.முகமது முகைதீனுக்கு கல்வியாளர்களும் சான்றோர்களும் தமிழறிஞர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement