
நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு
இலங்கை சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக் கூட்டம் (08) பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் நடந்தது.
புதிய தலைவராக முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக், செயலாளராக எஸார் மீராசாஹிப், பொருளாளராக தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.எம். சமீம், பிரதித் தலைவராக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் டாக்டர் ஏ.எம். மிஸ்பாஹ் உப தலைவராக ஜம்இய்யத்துல் உலமா சபையின் சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி எம்.எம்.எம். மீராசாஹிப் (ஷர்க்கி), பிரதிச் செயலாளராக காரைதீவு பிரதேச செயலகத்தின் முதல் நிலை சிறுவர் நல உத்தியோகத்தர் ஏ. ஜெஸ்மீர், உதவிச் செயலாளராக தொழிலதிபர் ஏ.எச்.எம். ஹாரூன், உப பொருளாளராக ஓய்வுபெற்ற காவல் அதிகாரி எம்.ஐ. நஜீம், கணக்காய்வாளராக நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார், ஊடக ஒருங்கிணைப்பாளராக யூ.எல்.எம். பைசர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
Advertisement