/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
தாய்லாந்து பேங்காக்கில் ஹனுமன் ஜெயந்தி
/
தாய்லாந்து பேங்காக்கில் ஹனுமன் ஜெயந்தி

இந்துக் கடவுள்கள் பல்வேறு வடிவங்களில் பக்தர்களுக்காக அருள் பாலித்தாலும், குறிப்பாக ஜெய் ஸ்ரீ ஹனுமனை வணங்கும் பக்தர்கள் அதிகமுண்டு என்பது அனைவரும் அறிந்தது. ஏனென்றால், சனிதோஷம் பிடித்தவர்களையே பாதுகாக்கும் வல்லமை கொண்டவர் என்பதால், சனிக்கிழமைகளில், பணியில் இருந்தால் கூட, விடுமுறை எடுத்து 108, 1008 என்று ஆஞ்சநேயரை சுற்றுவோர் ஏராளம். ஆஞ்சநேயரை வழிபட்டால் தட்டிப் போகும் காரியங்கள் எல்லாம் தடங்கல் இல்லாமல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அப்படிப்பட்ட ஹனுமன் ஜெயந்தி விழா, ஹனுமனுக்கு யாகம் வளர்த்து, வேள்விகள் அனைத்தும் செய்யப்பட்டு, சிறப்பாக அபிஷேகங்கள் மற்றும் ஊர்வலத்தோடு கடந்த 30/12/25 திங்கள்கிழமை அன்று பாங்காக் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்றது.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement