sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

செய்திகள்

/

பூட்டானின் தேசியதின விழாவில் மன்னரின் விருந்தினராக சத்குரு பங்கேற்பு!

/

பூட்டானின் தேசியதின விழாவில் மன்னரின் விருந்தினராக சத்குரு பங்கேற்பு!

பூட்டானின் தேசியதின விழாவில் மன்னரின் விருந்தினராக சத்குரு பங்கேற்பு!

பூட்டானின் தேசியதின விழாவில் மன்னரின் விருந்தினராக சத்குரு பங்கேற்பு!


டிச 18, 2024

Google News

டிச 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூட்டானின்177-வது தேசியதின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சத்குரு, பூட்டான் மன்னர் ஜிக்மேகேசர் நாம்கேல் வாங்சுக்கின் அழைப்பின் பேரில் அரசு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இது குறித்து சத்குரு பதிவிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் “அழகிய பூட்டான், உங்கள் தேசிய தினத்தில் இங்கு இருப்பது எங்களுக்குக் கிடைத்த பெரும்பாக்கியமும் கௌரவமும் ஆகும். மாண்புமிகு அரசர், அரச குடும்பத்தினர் மற்றும் பூட்டானின் அற்புதமான குடிமக்கள் அனைவரது உபசரிப்பும் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாகவும் நெஞ்சைத் தொடுவதாகவும் உள்ளது.


தனது குடிமக்களின் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை தரும் நாடு, மனிதகுலம் முழுவதற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அழகிய பூட்டான் நாட்டிற்கும் அதன் குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்” எனக் கூறியுள்ளார்.


https://x.com/SadhguruTamil/status/1868992759857656239


பூட்டானின் தேசியவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புதன்கிழமை மாலை நடைபெற்ற இசைநிகழ்ச்சி மற்றும் அரச விருந்து ஆகியவற்றிலும் சத்குரு கலந்து கொண்டார்.


பூட்டானின் முதல் மன்னர் கோங்சார் உக்யென் வாங்சுக்கின் முடிசூட்டு விழா 1907-இல் நடைபெற்றது. இதனை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் தேதி பூட்டானில் தேசியதின விழா கொண்டாடப்படுகிறது. இதில் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் நடைபெறும்.


இந்தியாவும் பூடானும் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் உறவுகளில் நீண்டகால நட்பைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன. அரச விருந்தினராக சத்குரு அழைக்கப்பட்டு இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான தொடர்பைக் காட்டுகிறது.



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us