/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
இலங்கை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஆய்வு
/
இலங்கை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஆய்வு
இலங்கை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஆய்வு
இலங்கை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஆய்வு
ஜூலை 21, 2025

கல்முனை: கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரச நிதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டடத்தொகுதியினை அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நேரில் கள விஜயம் செய்து அதனைப் பார்வையிட்டார்.
அக்கட்டிடத்தொகுதியில் இருக்கும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு, அதனை பொதுமக்கள் பாவனைக்கு உதவும் வகையில் விரைவில் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ளுமாறும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். ரகுமானிடம் கேட்டுக் கொண்டார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.ரகுமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உதவி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஹாரீஸ், எலும்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் எஸ். வரூன் பிரசாத், டாக்டர் பாறூக், பொது சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ, எம்.சமீம், கணக்காளர் ஜவாஹிர் உட்பட கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஆரிப் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement