sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

செய்திகள்

/

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

/

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு


பிப் 12, 2026

Google News

பிப் 12, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நேற்று (11) பேரவையின் தலைமைக் கரியாலயத்தில் ஸுரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.எல்.எம். ரஹ்பி (ஹிழ்ரி) தலைமையிலும், ஸுரா சபையின் செயலாளர் எம்.சி.எம். ரிலாவின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற நிகழ்வானது சமய ஆராதனையோடு நடைபெற்றது.
தலைமை தாங்கி நடத்திய ஸுரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.எல்.எம் ரஹ்பி (ஹிழ்ரி) பேரவையின் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய போது, இப்பிரதேசத்தில் எத்தனை இளைஞர்கள் இருந்தும் எம்மில் சிலரை மாத்திரம் இறைவன் தெரிவு செய்து இவ் உயரிய சேவயினை வழங்குவதற்கு உருதுணையாக இருந்த இறைவனுக்கு முதற்கண் நன்றியினை தெரிவிப்பதோடு, நன்மையான காரியம் எதுவாக இருந்தாலும் ஆரம்பித்து வைத்தவர்களுக்கு மரணித்தாலும் உலகம் முடியும் காலம் வரை நன்மை வந்து கொண்டே இருக்கும்.
அந்தவகையில் எமது களப்பணியாளர்களின் சேவைக்கு இவ்வுலகில் எவ்வளவு ஊதியமாக வழங்கினாலும் ஈடாகாது எனவும் அறிவுரை வழங்கினார்.
சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் பல்வேறு சமூக சேவை அமைப்புக்கள் கடந்த காலங்களில் காணப்பட்ட போதிலும் அவற்றினால் மக்களின் இறுதிக் கடமையாகிய ஜனாஸா கடமையைச் செவ்வனே நிறைவேற்றக் கூடிய ஓர் அமைப்பு இல்லாமையை இட்டு கவலைப்பட்டனர். அதனை நிவர்த்தி செய்து எல்லோராலும் தேசிய ரீதியில் நன்மதிப்பை பெற்ற எமது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சேவை அளப்பெரியது எனவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேரவையின் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவில் பின்வருவோர் சபையோரினால் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக எஸ்.எம். நசீர், பொதுச் செயலாளராக யூ.கே. காலித்தீன், பொருளாளராக ஏ.எச்.எம். முபின், உப தலைவர்களாக என்.எம். ஜெமின், ஏ.எம்.சப்கி, பிரதி தலைவர்களாக ஏ.எல். நியாஸ் ஹாஜி, எம்.சி.எம். ரிலா, உப செயலாளராக எல். நாசர், கணக்கு பரிசோதகராக எச்.எம் அமான் ஹாஜி ஆகியோரோடு, எம்.எம். ஹம்ஸா, ஐ.எல். இக்பால், எம்.ஏ.எம். அனஸ், என்.எம். சிராஜ், மற்றும் எம்.பஸ்லுன் ஆகியோர் நடப்பாண்டுக்கான நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.
சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி) உட்பட உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமையும் சிறப்பம்சமாகும்.
- இலங்கையில் இருந்து எம்.எஸ்.எம். ஸாகிர், எம்.பி.எம்.றின்சான்.


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us