
மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகள் வந்து சென்றாலும், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு கூடுதல் சிறப்புகள், ஏனென்றால் இறப்புக்குப்பின் ஆன்மா எங்கே செல்கின்றது என்று இதுவரை எந்த அறிவியலும் அறிந்து சொல்லாவிட்டாலும், முன்னோர்கள் கூறி வைத்துள்ள பட்டறிவின் நம்பிக்கையில், சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக முழுமையான நம்பிக்கை கொண்டு, வைணவக் கோவில்களில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பில், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்வதேயாகும்.
ஒவ்வொரு மனிதனும், தன் சக மனிதனுக்கும், சமுதாயத்துக்கும், தன்னாலான உதவிகள் செய்யும் போது, அவை புண்ணியங்களாக வரவு வைக்கப்பட்டும், அவற்றிற்கு எதிராக பயணிக்கும் போது, அது பாவங்களுக்காக வரவு வைக்கப்பட்டும், எமதர்மன் மற்றும் சித்திரகுப்தனால், மனிதனின் இறப்புக்குப்பின் கணக்கு நேர் சேர் செய்யப்படுவதாக ஐதீகம். அவ்வாறான ஒரு ஐதீகம் இருப்பதை பெரும்பாலானவர்கள் நம்புவதாலேயே, பாவச் செயல்கள் என்பது மிகக் குறைவான அளவில் நடைபெற்று, உலகம் இயங்க ஏதுவாக உள்ளது.
அப்படிப்பட்ட வைகுண்ட ஏகாதசி திருவிழா, பெருமாளுக்கு சிறப்பாக அபிஷேகங்களுடன் மற்றும் ஊர்வலத்தோடுபாங்காக் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்றது.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement