sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆஸ்திரேலியா

/

செய்திகள்

/

பிரிஸ்பேனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

/

பிரிஸ்பேனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

பிரிஸ்பேனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

பிரிஸ்பேனில் பரதநாட்டிய அரங்கேற்றம்


டிச 14, 2025

Google News

டிச 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரிஸ்பேன், ஈஸ்வராலயா கலைக்கூட மாணவி, அபிநயா இரவிச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் காலம்வேல் கம்யூனிட்டி கல்லூரி கலையரங்கில் மிகச் சிறப்பாக அரங்கேறியது. அபிநயாவின் 'மகா காளி', 'கலியுக வரதன்', 'சின்னஞ் சிறு கிளியே' நடனங்கள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.


இசையில், நாட்டியப்பள்ளியின் ஆசிரியை மங்களேஸ்வரி சுரேந்தர் நட்டுவாங்கம் செய்ய, அகிலன் சிவாநந்தன் வாய்ப்பாட்டு பாடினார். பக்க வாத்தியத்தில், ஆர்தவன்செல்வநாதன் மிருதங்கமும், வெங்கடேஷ் சிரிதரன் புல்லாங்குழலும், வெங்கடேசின் சகோதரி சௌம்யா சிரீதரன் வீணையும் வாசித்தனர். சாருஜன் அவர்களுடன் இணைந்து பல்வேறு சிறப்பொலிகளை வழங்கி மெருகூட்டினார். அகிலன், கர்நாடக சங்கீதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன், சுமார் 650க்கும் மேற்பட்ட பரதநாட்டியம் மற்றும் மிருதங்க அரங்கேற்றங்களில் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டியப்பள்ளியின் ஆசிரியை மங்களேஸ்வரி சுரேந்தர் அபிநயாவுக்கு சான்றிதழை வழங்கி, வாழ்த்துரைத்தார். இறுதியில், அபிநயாவின் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி நல்கி நாட்டியப்பள்ளி ஆசிரியையும், இசைக்கலைஞர்களையும் கௌரவித்தனர்.


- பிரிஸ்பேனிலிருந்து நமது செய்தியாளர் ஆ சோ ரெங்கநாதன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us