/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
சிட்னியில் தமிழ் எழுத்தாளரின் நூல் வெளியீடு
/
சிட்னியில் தமிழ் எழுத்தாளரின் நூல் வெளியீடு
டிச 10, 2025

பல்வேறு எழுத்துப் படைப்புகளுக்கு சாகித்திய விருது, தமிழக அரசு விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்ற எழுத்தாளர் மாத்தளை சோமு எழுதிய 100 சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா அண்மையில் சிட்னியில் நடைபெற்றது. மாத்தளை சோமு அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த நிலையில் அமைதியாகத் தனது எழுத்துப்பணியைச் சமூக நோக்கோடு செய்துவருபவர். அவரது இலக்கிய முயற்சிகளின் சிகரமாக மாத்தளை சோமுவின் நூறு சிறுகதைகள் தொகுப்பு நூல் சிட்னியில் வெளியானது.
அவரின் படைப்புகள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. மலையக மக்களின் வாழ்வியலை வரலாற்றின் ஊடாக சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளன. மலையக எழுத்தின் முன்னோடியான அவரது அனுபவங்கள், நினைவுகள், எதிரொலிகள், அனைத்தும் இப்போது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை சொல்ல மறந்த கதைகள், அடுத்த தலைமுறை கேட்க வேண்டிய கேள்விகள் பலவும் இந்நூலின் மூலம் வெளிப்படுகின்றன.
நூல் வெளியீட்டு விழாவுக்குத் தமிழறிஞர் ம.தனபாலசிங்கம் தலைமை ஏற்றார். தமிழ் ஆர்வலர் வசந்தராஜா வரவேற்புரையாற்றினார்.
- சிட்னியிலிருந்து தினமலர் வாசகர் எஸ்,சுந்தரதாஸ்
Advertisement

