sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆஸ்திரேலியா

/

செய்திகள்

/

ஆஸ்திரேலியாவில் சத்யசாய் பாபா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்

/

ஆஸ்திரேலியாவில் சத்யசாய் பாபா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்

ஆஸ்திரேலியாவில் சத்யசாய் பாபா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்

ஆஸ்திரேலியாவில் சத்யசாய் பாபா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்


நவ 03, 2025

Google News

நவ 03, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புட்டபர்த்தியைத் தலைமையிடமாக கொண்டு, இந்தியா மற்றும் உலகெங்கும் வியாபித்திருக்கும் ஸ்ரீசத்யசாய் பஜனை மடங்களும், தொண்டு நிறுவனங்களும் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை, நவம்பர் 23, 2025 துவக்கம், நவம்பர் 23, 2026 வரை வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளது.

இதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டு துவங்கி, அதன் ஓர் அங்கமாக 'பிரேம தாரு' என்ற பெயரில் 10 மில்லியன் மரக்கன்றுகளை உலகெங்கும் நடும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் இந்தியா மற்றும் உலகெங்குமுள்ள ஸ்ரீ சத்யசாய் பஜனை தொண்டு நிறுவனங்கள் பங்கெடுத்து வருகின்றன.


இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில், ஸ்ரீ சத்யசாய் பாபாவின் பிறந்த நாளான நவம்பர் 23 ஞாயிறன்று, ஆஸ்திரேலியாவின் பெருநகரங்களும் மற்றும் மாநில தலைநகர்களுமான சிட்னி (நியூசவுத்வேல்ஸ்), மெல்பேர்ன் (விக்டோரியா), பிரிஸ்பேன் (குயின்ஸ்லாந்து), அடெலெய்ட் (தென்ஆஸ்திரேலியா), கான்பரா (ஆஸ்திரேலியா தலைநகர்), மற்றும் பெர்த் (மேற்கு ஆஸ்திரேலியா), -லும் வெகு விமரிசையாக கொண்டாட பலவிதமான முன்னேற்பாடுகளும் நடந்து வருகின்றன.


இது குறித்து, மேலதிக விபரங்களை அறிய ஸ்ரீசத்யசாய் க்ளோபல் கவுன்சில் ஆஸ்திரேலியாவின் (Sri Sathya Sai Global Council Australia) வளைதலம் https://www.sai.org.au/ , மின்அஞ்சல் அல்லது சுற்றறிக்கையில் (Flyer) காணும் ஆஸ்திரேலியா தொண்டு நிறுவனத்தின் தொண்டர்களைத் தொடர்பு கொள்ளவும்.


- பிரிஸ்பேனிலிருந்து நமது செய்தியாளர் ஆ சோ ரெங்கநாதன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us