sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆஸ்திரேலியா

/

செய்திகள்

/

பிரிஸ்பேனில் இரு சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

/

பிரிஸ்பேனில் இரு சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

பிரிஸ்பேனில் இரு சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

பிரிஸ்பேனில் இரு சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்


பிப் 23, 2026

Google News

பிப் 23, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரிஸ்பேன், ஈஸ்வராலயா கலைக்கூடத்தின் மாணவிகளும், குணசீலன்-சந்திரா தம்பதிகளின் புதல்விகளுமான கவிநிலா மற்றும் மதிவதனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகச் சிறப்பாக அரங்கேறியது. மந்திர புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து 'குரு அழைப்பு' என்ற சிறப்பு நடனம், பரமகுரு மகா மகரிஷி அழைக்கும் விதமாக அமைந்திருந்தது.


நிகழ்ச்சியில், மயூர ஆலரிப்பு, நரசிம்ம கவுத்துவம், ஜனனி ஸ்துதி, தேவி ஸ்துதி, ஆனந்த கூத்தனின் தாண்டவம், மற்றும் முருகன் புகழ் பாடும் 'வள்ளிக் கணவன் பேரை' நனடங்களும் சிறப்பாக அமைந்திருந்தன.


இசையில், நாட்டியப்பள்ளியின் ஆசிரியை மங்களேஸ்வரி சுரேந்தர் நட்டுவாங்கம் செய்ய, அகிலன் சிவாநந்தன் வாய்ப்பாட்டு பாடினார். பக்க வாத்தியத்தில், ஆர்தவன்செல்வநாதன் மிருதங்கமும், செல்வி அகல்யா பவழன் வயலினும், வெங்கடேஷ் சிரிதரன் புல்லாங்குழலும், வெங்கடேசனின் சகோதரி சௌம்யா சிரீதரன் வீணையும் வாசித்தனர். சாருஜன் அவர்களுடன் இணைந்து பல்வேறு சிறப்பொலிகளை வழங்கி மெருகூட்டினார். அவர்களுடன் நாட்டியப்பள்ளியின் மாணவி ரக்ஷிகா ஜதி செய்தார்.


அகிலன், கர்நாடக சங்கீதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன், பல்வேறு பரதநாட்டியம் மற்றும் மிருதங்க அரங்கேற்றங்களில் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாத்திய இசையில் பங்கெடுத்த அனைவரும் வாய்ப்பாட்டு, நடனம், வாத்திய இசை என பல துறைகளிலும் புலகாங்கிதம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மாணவிகளின் தாயார் சந்திரா குணசீலன் தனது வரவேற்புரையில், படிப்பில் மட்டுமே நாட்டம் செய்யச்சொல்லும் பெற்றோருக்கு மத்தியில், நடனம் மற்றும் கலைத்துறையிலும் கவனம் செலுத்தச் சொல்லி தனது தந்தை அறிவுறுத்தியதை நினைவு கூர்ந்த அவர், தனது குழந்தைகளும் அவ்வழியைப் பின்பற்றியது குறிந்து பெருமையடைந்தார்.


நாட்டியப்பள்ளியின் ஆசிரியை மங்களேஸ்வரி சுரேந்தர், கவிநிலா மற்றும் மதிவதனாவுக்கு சான்றிதழை வழங்கி, வாழ்த்துரைத்தார். இறுதியில் கவிநிலா மற்றும் மதிவதனாவின் பெற்றோர் அனைவருக்கும் நன்றி நல்கி நாட்டியப்பள்ளி ஆசிரியையும், இசைக்கலைஞர்களையும் கௌரவித்தனர்.


- பிரிஸ்பேனிலிருந்து நமது செய்தியாளர் ஆ சோ ரெங்கநாதன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us