sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆஸ்திரேலியா

/

கோயில்கள்

/

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், ஆஸ்திரேலியா

/

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், ஆஸ்திரேலியா

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், ஆஸ்திரேலியா

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், ஆஸ்திரேலியா


ஜன 30, 2009

Google News

ஜன 30, 2009


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது திராவிட பாரம்பரியத்தை பறைசாற்றும், அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலாகும். பயகிரிட் மற்றும் பயனாசனா ஆகியவற்றின் கூட்டே கணபதி ஆகும். இவரே சோதனைகளைத் தந்து, இறுதியில் வேதனைகளை களைபவர் ஆவார். அனைவரும் எளிதில் வணங்கும் விதமாக அனைத்து இடங்களிலும் கோயில் கொண்டிருப்பவர் கணபதி ஆவார். பொதுவாக அனைத்து வைபவங்களிலும் சந்தனம் அல்லது மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகரையே முன்னிருத்தி வைக்கின்றனர். கேட்ட வரங்களை எளிதில் வழங்கக் கூடியவரும், நெருங்கக் கூடியவருமான தெய்வமே கற்பக விநாயகர் ஆவார். கற்பகம் என்ற தமிழ் வார்த்தை கல்பதரு யுன்ற சமஸ்கிரத சொல்லில் இருந்து தோன்றியதாகும். கல்பதரு என்பது கேட்டதை அருளும் மரம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் நிழலில் இருந்து எதை நினைத்தாலும் அது அப்படியே நடக்கும் என பழங்கால புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் தன்னை உண்மையாக வணங்குகிறவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கிறார். கணசர், கற்பக விநாயகர் என்ற பெயருடன் இரண்டு மட்டுமே கோயில் கொண்டுள்ளார். அவை தமிழகத்தின் பிள்ளையார்பட்டி மற்றும் இலங்கையின் கச்சாரி-நல்லூர் சாலையில் உள்ள ஜாஃப்னா ஆகியன ஆகும். நல்லூர் கற்பக விநாயகர் கோயிலில் உள்ள புரோகிதர்களுள் ஒருவரான சிவஸ்ரீ ஞானசேகர குருக்கள் என்பவர் தனது வாழ்க்கை முழுவதையும் தெய்வத்திற்காக அர்ப்பணித்தவர்.இவரின் வழித் தோன்றலாக ஏழு வயது சிறுவனான ரகுநாத சர்மா, சிறு வயது முதலே கற்ப விநாயகருக்க சேவைகள் செய்து வந்தார். இளைஞரான ரகுநாத சர்மா, சில இட மாற்றங்களால் கண்டியில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயிலின் புரோகிதராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1999 ம் ஆண்டு ஆஸ்திரேலிய தலைநகரான சிட்னிக்கு குடிபெயர்ந்த ரகுநாத சர்மா, அங்கு கணேசர் திருக்கோயில் ஒன்றை அமைக்க எண்ணினார். தனது விருப்ப தெய்வமான கற்பக விநாயகரின் பெயராலேயே சிட்னியில் கோயில் அமைக்க வேண்டும் என தீர்மானித்தார். தனது விருப்பத்தை, சில பக்தர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார். 2001 ம் ஆண்டு இந்தியரராஜாவின் உறுதுணையுடன் கற்பக விநாயகர் திருக்கோயில் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. அக்கோயிலுக்கு கற்பக விநாயகர் திருக்கோயில் என பெயர் வைக்கவும் தீர்மானித்தார். 2004 ம் ஆண்டு குமார ராஜன் என்பவரின் துணையுடன் சிவஸ்ரீ ரகுநாத குருக்கள் நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இக்கோயிலை பதிவு செய்தனர். சில பொருளாளர்களின் உதவியுடன் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட விநாயகர், ராஜராஜேஸ்வரி அம்மன் மற்றும் பால முருகன் ஆகிய தெய்வங்களின் பஞ்சலோக விக்ரஹங்கள் லிட்கோம்ப் பகுதியில் தற்காலிகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பிறகு டாக்டர்.ரஞ்சனி மற்றும் டாக்டர். சரவணமுத்து இந்திரராஜா ஆகியோர் மாதாந்திர விநாயகர் சதுர்த்தி பூஜைகளை செய்யும் பொருப்பினை ஏற்றுக் கொண்டனர். பின்னர் இக்கோயிலில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பூஜைகள் நடைபெற துவங்கியது. பின்னர் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பூஜைகள் நேரங்கள் விரிவுபடுத்தப்பட்டன. சிறப்பு ஊஞ்சல் உற்சவ பாடல்களும் டாக்டர்.பாரதி என்ற கவிஞரால் இயற்றப்பட்டது. நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், பூஜைகள் மற்றும் பஜனைகள் பொது இடங்களில் அதிகளவில் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை பூஜைகள் மட்டும் லிட்கோம்ப் பகுதியில் அமைக்கப்பட்ட கோயில் அறையில் நடத்தப்பட்டு வந்தது. 2005 ம் ஆண்டு சிவன்-பார்வதி விக்ரஹங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு, ஹோம்பஷ் ஆண்கள் பள்ளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்விடத்திலேயே அந்த ஆண்டின் ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்களின் பேருதவியுடன் கோயிலுக்கான நிரந்தர இடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. டாக்டர்.இந்திரராஜாவின் மூலம் 123 கிரசென்ட் பகுதியில் நிலம் பெறப்பட்டது. பக்தர்கள் அளித்த பெரிய அளவிலான பொருளதவியின் துணையுடன் வெகு விரைவிலேயே இக்கோயிலுக்கான கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றன. 2006 ம் ஆண்டு ஜுலை மாதம் 3 ம் தேதி கற்பக விநாயகர் கோயிலின் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மிகப் பெரியளவில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு மண்டல அபிஷேகமும் நடைபெற்றது. அதே போன்று அவ்வாண்டில் வந்த விநாயகர் சதுர்த்தியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதுமட்டுமின்றி இந்து திருவிழாக்களான நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2006 ம் ஆண்டு டிசம்பர் 12 ம்தேதி தில்லை நடராஜர், சிவகாம சுந்தரி மற்றும் மாணிக்கவாசகர் போன்ற விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2007 ம் ஆண்டு ஜனவரி 21 மற்றும் 22 ம் தேதிகளில் பஞ்சமுக விநாயகர் பிரதிஷ்டை விழா நடத்தப்பட்டது. பக்தர்களின் ஒத்துழைப்பு மட்டுமின்றி , ஆர்வலர்களின் தன்னலமற்ற சேவையில் கோயிலின் தோட்டம் சுற்றுப்புறங்கள் தூய்மை செய்யப்பட்டன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் உலக நன்மைக்காக பக்தர்களால் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்படுகிறது. கற்பக விநாயகரின் அருளால் இக்கோயில் புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாது, சிறந்த கலாச்சார மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

கோயில் முகவரி :

Sri Katphaga Vinayakar Temple,

123 The Crescent, Flemington,

NSW 2140, Australia.

தொலைப்பேசி : 9746 9590

இணையதளம் : www.vinayakar.org.au


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us