/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
நிகழ்ச்சிகள்
/
ஜுன் 21, 22ல் ஐரோப்பிய சைவ பெருவிழா
/
ஜுன் 21, 22ல் ஐரோப்பிய சைவ பெருவிழா

ஜூன் மாதம் 21, 22 ஆகிய தேதிகளில், ஜெர்மனியில் உள்ள பிராங்க்பேர்ட் நகரில், முதன்முறையாக ஐரோப்பிய சைவப் பெருவிழா நடைபெற உள்ளது. இது குறித்து அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் நிர்வாகி திருச்சிற்ம்பலம் கூறியிருப்பதாவது:
ஜூன் மாதம் 21, 22 ஆகிய தேதிகளில், ஜெர்மனியில் உள்ள பிராங்க்பேர்ட் நகரில், முதன்முறையாக ஐரோப்பிய சைவப் பெருவிழா நடைபெற உள்ளது. அகண்ட தமிழ் உலகம் மற்றும் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் , பிராங்க்பேர்ட், ஜெர்மனி இணைந்து, அனைத்து ஐரோப்பா நாடுகளில் இருந்தும் சைவ பக்தர்களை ஒன்று திரட்டும் நோக்கத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது. இங்குள்ள நமது தமிழர்கள், இளைய தலைமுறையினர் மற்றும் மழலைச் செல்வங்கள் ஐரோப்பிய மொழிகளான ஜெர்மன், பிரென்ச் இத்தாலி போன்ற வெவ்வேறு மொழிகளையும் அவர்கள் புலம்பெயர்ந்த நாட்டில் கற்று, தேர்ச்சி பெறும் மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இருப்பினும், குழந்தைகள் தமிழிலும் மிக அழகாக எழுதவும் பேசவும் அவசியம் கற்றுக் கொள்கின்றனர். இதற்காக பெற்றோர்களும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், நமது தமிழ் வெறும் மொழி அல்ல, தமிழும் சமயமும் இன்றியமையாததாகும் என்பதை இவ்விழாவில் வலியுறுத்தப்படும்.தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் மறைகள் மீது அனைத்து வயதினருக்கும் ஆர்வம் மேம்படவும் இவ்விழா வழி வகுக்கும்.
இரு கலாச்சாரத்தில் வாழும் அடுத்த தலைமுறையினருக்கு சைவத் திருமுறைகளின் சாராம்சம் எவ்வாறு வாழ்வை நெறிப்படுத்தும் என்பதற்கு இவ்விழா ஒரு வித்தாக இருக்கும். தங்கள் ஆதரவுடனும், ஆசியுடனும் சைவமும் , தெய்வீக தமிழும் ஐரோப்பா எங்கும் நிறைந்திட வேண்டி வணங்குகிறோம் .
Advertisement

