
நெதர்லாந்தில் Amstelveen என்ற பகுதியில் அனைத்து இந்தியர்களும் ஒன்றுகூடி தீபாவளி திருநாளை மிகவும் விமர்சையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடினர்.
அலங்கார மேடையில் நெதர்லாந்தில் குடிபெயர்ந்திருக்கும் அனைத்து மொழி பேசும் இந்தியர்கள் தங்களுடைய மொழியையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதத்தில் மிகவும் அழகாக நடனம் ஆடினர். அது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இது கடந்த பதினாறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
அங்கு நிறைய தற்காலிக சிற்றுண்டி கடைகளில் இந்திய தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டன. எங்களுக்கு வெளிநாட்டில் இது புதியதாக இருந்தது. எங்கு பார்த்தாலும் நம் தென்னிந்திய உறவுகள். நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். அங்கு விழாவின் நிறைவில் வானவேடிக்கை இடம் பெற்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நாங்கள் நெதர்லாந்தில் வாழும் என் மகள் குடும்பத்துடனும், அவர்கள் நண்பர்களுடனும் இவ்விழாவில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
- தினமலர் வாசகர்கள் முரளிதரன்- உமாமுரளிதரன்
Advertisement