/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
நார்வேயில் தென்னிந்திய சங்கீத நிகழ்ச்சி - 'சங்கீத யாத்திரை'
/
நார்வேயில் தென்னிந்திய சங்கீத நிகழ்ச்சி - 'சங்கீத யாத்திரை'
நார்வேயில் தென்னிந்திய சங்கீத நிகழ்ச்சி - 'சங்கீத யாத்திரை'
நார்வேயில் தென்னிந்திய சங்கீத நிகழ்ச்சி - 'சங்கீத யாத்திரை'
அக் 17, 2024

நார்வேயில் இசைப் பயிலும் தமிழ் பிள்ளைகள் கச்சேரியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அஸ்கர் மண்டலத்தின் ஹெக்கடல் டோர்க் அரங்கத்தில், அக்டோபர் 13 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை, 'சங்கீத யாத்திரை' எனும் பெயரில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சுற்றி புனித தலங்களைப் புகழ்ந்து பாடப்பட்ட கீர்த்தனைகள் பாடப்பட்டன.
இந்த நிகழ்வை 'ஆர்ட் டு ஹார்ட் இன்ஸ்டிடியூட்' நிறுவனர் உமா ரங்கநாதன் நடத்தியுள்ளார். அவரும், அவரது கணவர் சந்திரகாந்த் ராமமூர்த்தியும் கர்நாடக இசை ஆர்வலர்கள் ஆவார். உமா ரங்கநாதன் கர்நாடக இசை கலைஞர் காயத்ரி வெங்கடராகவனின் சீடர் ஆவார். சந்திரகாந்த் ராமமூர்த்தி, ஈரோடு நாகராஜனின் சீடரான மிருதங்க கலைஞர் ஆவார்.
நிகழ்வில் அஸ்கர் மேயர் லெனே கொன்ராடி மற்றும் அஸ்கர் நகராட்சி கலாச்சார துறை இயக்குனர் கிறிஸ்டர் பெஸ்ட் குல்பிராண்ட்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். தென்னிந்திய சங்கீதத்தைப் பயிலும் பிள்ளைகள் கச்சேரியில் பங்கேற்று பாடுவதைக் கண்டது பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளலாம்.
ArtToHeartInstitute
https://www.instagram.com/umaranganmusic/
https://www.facebook.com/uma.ranganathan.3760
- தினமலர் வாசகர் Ram
Advertisement