/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
ஜெர்மெனியில் டிராகன் திரைப்படம்
/
ஜெர்மெனியில் டிராகன் திரைப்படம்

ஜெர்மெனியின் மியூனிக், ஆலன் போன்ற நகரங்களில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது 'டிராகன்' திரைப்படம். பிரதீப் ரங்கநாதன், அனுபமா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என நிறைய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் இத்திரைப்படம், மக்கள் வெள்ளத்தில் உற்சாக கும்மாளம் போட்டு வசூல் மழையை கூட்டிக் கண்டே போகிறது.
கல்லூரி மாணவர்கள் என்றாலே குடி, கும்மாளம், கூத்து என்று நிறைய படங்களில் நெகட்டிவ் இமேஜ் உருவாக்கியவர்களை டிராகன் மூலம் வெளுத்து வாங்கி இருக்கிறார் இயக்குனர். அந்த Good thought-க்கு வாழ்த்துக்கள், அஸ்வத் மாரிமுத்து.
கல்லூரியிலும் படிக்க வேண்டும், வேலையும் செய்ய வேண்டும், காதலிக்கும் பதில் சொல்ல வேண்டும் என multitask குழப்பத்தை முகத்தில் அருமையாக காட்டி நடித்திருக்கிறார், பிரதீப் ரங்கநாதன். ஒவ்வொரு தடவையும் 'தன்னுடைய தவறு வெளியே தெரிந்து விடுமோ' என்று மாட்டிக் கொண்டு முழிக்கும் நேரத்தில், அவர் எச்சில் விழுங்குவதை கூட அருமையாக ரெக்கார்ட் செய்து இருக்கிறார் சவுண்ட் இன்ஜினியர்.
காயடு லோகர், அழகு தேவதை அனுபமா இருவரும் நடிப்பிலும் ஜொலிக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதனை ஜெயிக்க வைப்பதன் மூலம் தன்னுடைய குற்றுணர்ச்சி நீங்கலாம் என்பதற்காக அவர் செய்யும் பிரயத்தனங்கள் அருமை.
நண்பர்களிடம் 18,000 ரூபாய் வாங்கி சம்பளமாக வீட்டில் கொடுத்து மீண்டும் அப்பாவிடமிருந்து வாங்கி நண்பர்களிடம் கொடுக்கும் ஐடியா சூப்பர்.
பாம்பே வந்திறங்கும் காயடுலோகரை சந்திப்பதற்காக வேலூர் 'டு' சென்னை மீண்டும் வேலூர் - அதன் பின் பரீட்சை ஒழுங்காக எழுத முடியாமல் தவிப்பது, பேப்பர் சேசிங் என அதனுடைய consequences-ஐ அழகாக திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குனர். லியோன் ஜேம்ஸ் இசையும் நிக்கெத் பொம்மி ரொட்டியின் ஒளிப்பதிவும் படத்துக்கு மிகப்பெரிய பிளஸ்.
25 வருடங்களுக்கும் மேலாக நான் IT-யில் வேலை செய்கிகிறேன். கௌதம் வாசுதேவன் இன்டர்வியூ செய்யும் இடம் மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. அந்தக் காட்சியை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.
பொதுவாக மிஷ்கினை எனக்கு பிடிக்காது. சமீபத்தில் கூட அவருடைய பேச்சு பிரச்சனையானது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் திரைப்படத்தில் கலக்கி விட்டார். இதற்கு முன்பு அவர் மீது இருந்த எரிச்சலை அப்படியே துடைத்தெறிந்து விட்டது அவரின் நடிப்பு.
இடைவேளை சமயத்தில் மிஷ்கின், பிரதீப் ரங்கநாதனை சந்திக்க வரும்போது, தன்னுடைய மகளை திருமணம் செய்ய சொல்லுவாரோ என்று நான் நினைத்தேன். ஆனால் அந்த இடத்தை வித்தியாசமாக சிந்தித்து திரைக்கதைக்கு இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்கிறார் இயக்குனர். வாழ்த்துக்கள் அஸ்வந்த் மாரிமுத்து. தேனப்பன், கே எஸ் ரவிக்குமார், 'Fatman' ரவீந்திரன் என நிறைய பரிச்சயமான முகங்கள் உண்டு. மொத்தத்தில் திரைப்படம் ரொம்ப சூப்பர்.
- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்
Advertisement