/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
பிரான்ஸில் பங்குனிஉத்திரம்; முருகப்பெருமான் திருக்கல்யாணம்
/
பிரான்ஸில் பங்குனிஉத்திரம்; முருகப்பெருமான் திருக்கல்யாணம்
பிரான்ஸில் பங்குனிஉத்திரம்; முருகப்பெருமான் திருக்கல்யாணம்
பிரான்ஸில் பங்குனிஉத்திரம்; முருகப்பெருமான் திருக்கல்யாணம்
மார் 26, 2024

பிரான்ஸ், கிரிஞி சனாதான தர்ம பக்த சபையின் சார்பாக பங்குனி உத்திரம் வள்ளி தெய்வானை முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை9 மணி வரை சுவாமிக்கு அபிஷேக ஆராதனை உடன் , காவடியாட்டம், பன்னீர் குடம் அதைத் தொடர்ந்து மாலை திருமண வைபவம் நடைபெற்றது. திருமண வைபவத்தில் மாப்பிள்ளை வீட்டினர் முருகப்பெருமானுக்கு சீர்வரிசைகளையும் ,பெண் வீட்டினர் வள்ளி தெய்வானைக்கு சீர்வரிசைகளையும் சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வு அனைவரையும் பரவசத்தில் ஆட்கொண்டது பஜனைக் குழுவினர் திருப்புகழ் பாடல்களைப் பாடினர். திருமண வைபவத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் திருமண விருந்து சிறப்பாக வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் இறைவனுடன் அருள் பெற்று மனம் முழுவதும் இறைவனுடைய பக்தியில் கலந்து மனம் மகிழ்ச் சியாக சுவாமியின் பிரசாதத்துடன் இல்லம் திரும்பினர். அனைவருக்கும் சனாதன தர்ம பக்த சபையின் சார்பாக கோயில் நிர்வாகம் நன்றியை தெரிவித்துக் கொண்டது.
https://youtu.be/cPatlbbKdAE?feature=shared
- நமது செய்தியாளர் ஹரேராம் தியாகராஜன்
Advertisement