/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
பிரிட்டிஷ் பார்லிமென்டில் பொங்கல் விழா
/
பிரிட்டிஷ் பார்லிமென்டில் பொங்கல் விழா
ஜன 17, 2025

பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஜீபிளி ஹாலில், பிரிட்டிஷ் தமிழ் பேரவை (BTF) நடத்திய பொங்கல் விழாவானது, பாரம்பரியமும் பெருமையும் மிக்கதாக அமைந்தது. இவ்விழாவில், முன்னாள் குராய்டன் நகராட்சியின் துணை சிவிக் மேயர், கவுன்சிலர் அப்பு, தமிழில் உரையாற்றி அனைவரையும் ஈர்த்தார். அவரது உரை, தமிழ் மொழியின் வளமும், பாரம்பரியத்தின் பெருமையும் பறைசாற்றியது. இத்தகைய நிகழ்ச்சிகள், தமிழர் கலாச்சாரத்தை உலக அரங்கில் உயர்வாக நிலைநிறுத்துகின்றன.
லண்டன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இவ்விழாவில் கலந்துகொண்டு தங்கள் வலுவான ஆதரவைத் தெரிவித்தனர். அவர்களின் உரைகள், தமிழ் சமூகத்தின் சமூக, கலாச்சார முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பிரித்தானிய சமூகத்தில் தமிழர்களின் பங்களிப்பு குறித்து பாராட்டுகளைப் பெற்றன.
இத்தகைய நிகழ்வுகள், பிரித்தானியாவில் தமிழர் சமூகத்தின் ஒருமைப்பாட்டையும், அவர்களின் கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன.
Advertisement