sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

செய்திகள்

/

தொல்காப்பியம் நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியீடு

/

தொல்காப்பியம் நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியீடு

தொல்காப்பியம் நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியீடு

தொல்காப்பியம் நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியீடு


பிப் 04, 2026

Google News

பிப் 04, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொல்காப்பியம் நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியீடு
இந்தியக் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT) வெளியிட்ட 'தொல்காப்பியம்' நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு 26.01.2026 அன்று ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் வெளியிடப்பட்டது.
பிராங்பர்ட் இந்தியத் தூதரகத்தின் துணை தூதர் (Consul General, CGI, Frankfurt) சுசிதா கிஷோர் நூலை வெளியிட்டார்.
ஹெஸென் மாநில உள்துறை அமைச்சகத்தின் மாநிலச் செயலாளர் மார்ட்டின் ரோஸ்லர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிராங்பர்ட் தமிழ்ச் சங்கத்தின் (FTS) தலைவர் பாலாஜி பாலு ஹரிதாஸ் முன்னிலை வகித்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடுகளை ஜெர்மனியில் கொண்டு சேர்ப்பதற்கான பணிகளைப் பிராங்பர்ட் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து வருகிறது. Indian Education Ministry இந்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் CICT ஆகியவற்றுடன் இணைந்து இந்த நூல் வெளியீட்டுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை பிராங்பர்ட் தமிழ்ச் சங்கம் FTS செய்திருந்தது.
வெளிநாட்டு மண்ணில் செம்மொழித் தமிழுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் ஒரு முக்கிய மைல் கல். ஜெர்மனி முழுவதும் தமிழ் பாரம்பரியம், மொழி மற்றும் சங்க இலக்கியங்களை மேம்படுத்துவதில் பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்த பெருமையாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us