தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/நிகழ்ச்சிகள்/துபாயில் நவம்பர் 12-ல் ரத்ததான முகாம்

துபாயில் நவம்பர் 12-ல் ரத்ததான முகாம்

துபாயில் நவம்பர் 12-ல் ரத்ததான முகாம்


நவ 11, 2026

Google News

நவ 11, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: கிரீன் குளோப் (Green Globe) - துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் (CDA) அங்கீகாரம் பெற்ற தன்னார்வத் தொண்டர் குழு சார்பில் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று ரத்ததானம் செய்யுமாறு கிரீன் குளோப் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

முகாம் நடைபெறும் நாள்: வியாழக்கிழமை, நவம்பர் 12, 2026

நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை.

இடம்: லூலு ஹைப்பர் மார்க்கெட், அல் குசைஸ், துபாய்.

ஒருவரின் ரத்ததானம் பல உயிர்களைக் காப்பாற்றுவதுடன், மருத்துவ உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் அளிக்கும். மனிதநேயத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த உன்னதப் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் தகவல்கள் மற்றும் தொடர்புக்கு:

+971 52 190 5223
+971 50 216 5838

ஒவ்வொரு துளி ரத்தமும் முக்கியம்! ஒவ்வொரு ரத்ததானம் செய்பவரும் மதிப்புக்குரியவர்!

மனிதநேயமே முதன்மை - மதமில்லை, சம்பிரதாயமில்லை, சேவை மட்டுமே என்ற நோக்கத்துடன் கிரீன் குளோப் குழுவினர் இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளனர்.

- நமது வாசகர் அப்துல் ரஹ்மான்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us