
துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீக்காரம் பெற்ற சமூக நல செயல்பாட்டு அமைப்பான கிரீன் குளோப் சார்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் 55-வது தேசிய தினம் ( ஈத் அல் எதிஹாத்) கொண்டாட்டத்தை முன்னிட்டு, பல்வேறு நாடுகள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்ட மக்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் வகையில், 'ONE PEOPLE. ONE CELEBRATION - ஒரே மக்கள், ஒரே கொண்டாட்டம்' என்ற மாபெரும் சர்வதேச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தனித்துவமான சிறப்பே உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் எவ்வித வேறுபாடுகளுமின்றி சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருவதுதான். இந்த ஒற்றுமையையும், பன்முகக் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கில் இந்தச் சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
55 வெவ்வேறு நாட்டினர்
55 அமீரக சுற்றுலாத் தலங்கள்
55 பொதுமக்கள்
55 தன்னார்வளர்கள்
55 குழந்தைகள்
இந்த நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக, 55 வெவ்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த 55 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒவ்வொரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான ஜிக்சா (Giant UAE Destinatinatons Jigsaw Puzzle) ஒன்றை உருவாக்கவுள்ளனர்.
இந்தச் சாதனை முயற்சி கிராண்ட் யூனிவர்ஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ் இல் இடம்பெறுவதற்கான சிறப்பு முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்த ஜியன்ட் ஜிக்சா சாதனை முயற்சியில் பங்கேற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தொடரும் நிகழ்வுகள் :
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான நேரடி ஓவியம் மற்றும் படைப்பாற்றல் நிகழ்ச்சிகள்
Tiny Tots குழந்தைகளுக்கான சிறப்பு செயல்பாடுகள்.
பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்.
நிகழ்ச்சி விவரங்கள்:
நாள்: 29. 11. 2026,ஞாயிறு
நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை
இடம்: ஜாபீல் பார்க், நுழைவாயில் எண்: 2, துபாய்.
அனைத்து நாட்டினருக்கும் அனுமதி உண்டு.
முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
முன்பதிவுக்கு :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe5xV3JIDO0AOSTVvvJcBKRZVfRi2YnsRuZE08vJslQGj0hqw/viewform?pli=1
மேலும் இந்த சாதனை நிகழ்வில் பங்கு பெற விரும்புவோர் கீழகாணும் எண்களை தொடர்பு கொள்ளவும் :
0502165838, 0521905223
உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த மகத்தான கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளுங்கள். பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களை அறிந்துகொள்ளவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை உலகிற்கு எடுத்துக்காட்டவும் கிரீன் குளோப் அமைப்பு அழைக்கிறது.
- நமது வாசகர் ஹுமைத்
Advertisement

