தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அல் அசாவில் பாரம்பரியமும் பண்பாடும் சங்கமித்த ATS தீபாவளித் திருவிழா

அல் அசாவில் பாரம்பரியமும் பண்பாடும் சங்கமித்த ATS தீபாவளித் திருவிழா

அல் அசாவில் பாரம்பரியமும் பண்பாடும் சங்கமித்த ATS தீபாவளித் திருவிழா


நவ 07, 2026

Google News

நவ 07, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளிநாட்டு மண்ணிலும் தாயகத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமிதத்தையும் போற்றும் வகையில், அல் அசா தமிழ்ச் சங்கம் (ATS) சார்பில் தீபாவளி கொண்டாட்டம் சவுதி அரேபியாவின் அல் அசாவில் உற்சாகமாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய விழா, குத்து விளக்கேற்றலுடன் களைகட்டியது. குடும்பங்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய இந்நிகழ்வு, தீபாவளியின் அடிப்படைத் தத்துவங்கள் அன்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை அழகாக வெளிப்படுத்தியது.

குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும், பெரியவர்களின் இசை மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. விழா அரங்கின் கண்கவர் அலங்காரங்கள், தீப ஒளியின் அழகு, உற்சாகமான நிகழ்ச்சிகள் மற்றும் அறுசுவை விருந்துபசாரம் என ஒவ்வொரு அம்சமும் கொண்டாட்டத்திற்கு கூடுதல் பொலிவூட்டின.

தாயகத்தை விட்டு வெகு தொலைவில் வாழ்ந்தாலும், தங்களது பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரிய விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் வெளிநாடு வாழ் இந்திய சங்கங்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்த வகையில், ATS முன்னெடுத்த இத்தகைய கொண்டாட்டங்கள் சமூக உறவுகளை வலுப்படுத்துவதோடு, தலைமுறைகளுக்கு இடையிலான கலாச்சார பாலமாகவும் அமைகின்றன.

இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை ATS நிர்வாக உறுப்பினர்கள் முனைவர் நாகராஜன் - அருணா, பொறியாளர் நடராஜ் - தெய்வானை, பொறியாளர் புதியசாமி - மகாலட்சுமி, பொறியாளர் செந்தில் - நந்தினி, ரவூஃப் - ஸாலிஹா, பொறியாளர் அருண்பாண்டியன் - பூங்கொடி மற்றும் முனைவர் ஆயிஷா முக்தார் ஆகியோர் ஒருங்கிணைந்து மேற்கொண்டனர்.

விளக்குகள் ஏற்றுவது ஒரு நாள் கொண்டாட்டமாக இருக்கலாம்; ஆனால் அன்பையும் ஒற்றுமையையும் இதயங்களில் ஏற்றுவது வாழ்நாள் கொண்டாட்டம்! அந்த இனிய உணர்வைப் பகிர்ந்து கொண்ட ATS தீபாவளி விழா, மகிழ்ச்சிகரமான நினைவுகளுடன் நிறைவடைந்தது.

- நமது செய்தியாளர் எம். சிராஜ்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us