/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் கண்கவரும் பருத்தி புடவைகளின் அணிவகுப்பு
/
துபாயில் கண்கவரும் பருத்தி புடவைகளின் அணிவகுப்பு
ஜூன் 05, 2025

துபாய்: துபாய் ஊத் மைத்தா பகுதியில் அமைந்துள்ள ஜபீல் லேடீஸ் க்ளப் வளாகத்தில், இந்திய தேசத்தின் 28 மாநில பருத்தி புடவைகளின் நாகரீக உலா நடைபெற்றது. இந்திய துணை தூதரக கான்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் மற்றும் அவர் மனைவி உமா பார்வதி சிறப்பு விருந்தினர்களாகவும், ரமேஷ் மஹாலிங்கம் மற்றும் அவர் மனைவி ஜெயா கௌரவ விருந்தினர்களாகவும் பங்கு கொண்டனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள புஜௌடி கிராமத்தில் உள்ள நெசவாளர்களுக்கு தங்கள் சேவையை வழங்க நிகழ்ச்சி குழுவினர் அறிவித்ததை அடுத்து சதீஷ்குமார் தன் ஆதரவையும் தெரிவித்தபோது அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்திய பெண்கள் கலந்து கொண்டு, உமா குருநாதனின் ஆடை வடிவமைப்பில் உருவான நம் நாட்டின் பாரம்பரிய உடைகள், வடமாநில திருமண புடவைகள், மேற்கத்திய நாடுகளின் மாலை வேளை நாகரீக ஆடைகள், பருத்தி புடவைகள் இவற்றில், நேர்த்தியான தலையலங்காரம் மற்றும் இந்திய நகைகளை அணிந்து நிகழ்ச்சி காண வந்தவர்களை அதிசயிக்க வைத்தனர்.
மேடையில் பங்கெடுத்தவர்கள், சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் ஒருமித்த மனதுடன், பருத்தி ஆடைகளுக்கும், நெசவாளர்களுக்கும் ஆதரவை அளிப்போம் என உறுதி மொழி எடுத்தனர். பருத்தி உடைகளில் வலம் வந்த பெண்களுக்கு சிறப்பு கிரீடம் அணிவித்து, சிறந்த புன்னகை, சருமம், புகைப்படத்திற்கேற்ற முகம், தோற்றம், உடையழகு போன்ற பிரிவுகளில் 5 பெண்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி, கிரீடம் வைத்து அழகாக கௌரவித்தனர்.
பங்கெடுத்த அனைவருக்கும் நினைவு சின்னமும், இளையவர்களுக்கு சான்றிதழ்களும், உணவு, உடை, அலங்காரப்பொருட்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த புரவலர்களுக்கு நன்றி கூறி, ஆமி அக்னிஹோத்ரி மற்றும் லக்ஷ்மி ப்ரியா தொகுத்து வழங்க, க்ராஃப்ட் சஃபார் ஆன், சிலேடை சித்தர் சேது, பிரகாஷ், ஆனந்த், பேபி மற்றும் ஆகியோர் உறுதுணை அளித்தனர். உமா குருநாதன், முஸ்கான் மற்றும் ரமா மலர் இணைந்து ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement