/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தாவில் அட்வான்ஸ் மீடியா இசை நிகழ்ச்சி
/
ஜெத்தாவில் அட்வான்ஸ் மீடியா இசை நிகழ்ச்சி
ஜூன் 27, 2025

ஜெத்தா: ஜெத்தாவில் அட்வான்ஸ் மீடியா நடத்திய இசை நிகழ்ச்சி மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியது. ஷரஃபியா பகுதியில் உள்ள சென்னை எக்ஸ்பிரஸ் ஆடிடோரியத்தில் நடத்தப்பட்ட இசை விருந்து “ராகலயம்-2” என பெயரிடப்பட்டது. புகழ்பெற்ற சமூக ஆர்வலர் வாசு வெள்ளைதடத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஜெத்தாவில் புகழ்பெற்ற பாடகர்கள் சிக்கந்தர் அலி, லத்தீப் பாபு, நாசர் மோங்கம் , ஆயிஷா நாசர், ரைசா, ஷமீம் (இலங்கை), பசாயிர் (இலங்கை), அம்ஜத் கான், கமருதீன் லுலு ஆகியோரின் பாடல்கள் ரசிகர்களை பரவசப்படுத்தின.
நவ்ஷாத் சாத்தனூர் வரவேற்புரை வழங்கினார். மீடியா இயக்குனர் அஷ்ரஃப் அழீகோட் தலைமையில் கபூர் கொடுவள்ளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஜாபர் அலி பாலக்கோடு, பஷீர் அலி பருத்திகுன்னன் உள்ளிட்டோர் வாழ்த்து நிகழ்த்தினர். அட்வான்ஸ் மீடியா இசைக்கு முக்கியத்துவம் அளித்து ஏற்பாடு செய்யும் மாதந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சி.எச். பஷீர், அஷ்ரஃப் காலிக்கட்டு, சுபைர் உள்ளிட்டோர் முழுமையான ஆதரவையும் அறிவித்தனர்.
இசையின் மாயாஜாலத்தில் வழியாக பல்வேறு மொழிகளில் பாடப்பட்ட பாடல்கள் கலந்து கொண்ட அனைவரையும் பழைய காலத்திற்கு இட்டுச்சென்றது 90-களிலும் 2000-களில் பிரபலமான பாடல்கள், பார்வையாளர்களின் இளமையின் பொன்னான காலத்தை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்தன. ஒவ்வொரு பாடலின் போதும் பார்வையாளர்களும் சேர்ந்து பாடினார்கள். ஒளியமைப்பு, ஒளியமைப்பின் தரமும் நிகழ்ச்சியின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கியது
வண்ணமயமான LED பின்னணி அமைப்பு அட்வான்ஸ் மீடியாவின் சிறப்பம்சமாகும். அனைத்து மொழிகள் பேசும் நண்பர்கள் கலந்து கொண்ட இவ் விழாவில் ஜெத்தா தமிழ்ச் சங்கம் நிர்வாக குழு உறுப்பினர் ஜெய் ஷங்கர், அயலக அணி மேற்கு மண்டல பொறுப்பாளர் எழில் மாறன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement