/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
தமிழக மீனவர்களை மீட்க பஹ்ரைன் பாரதி தமிழ் சங்கம் தொடர் முயற்சி
/
தமிழக மீனவர்களை மீட்க பஹ்ரைன் பாரதி தமிழ் சங்கம் தொடர் முயற்சி
தமிழக மீனவர்களை மீட்க பஹ்ரைன் பாரதி தமிழ் சங்கம் தொடர் முயற்சி
தமிழக மீனவர்களை மீட்க பஹ்ரைன் பாரதி தமிழ் சங்கம் தொடர் முயற்சி
அக் 18, 2024

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 28பேர் ஈரான் நாட்டிற்கு மீன் பிடி தொழிலுக்காக சென்றவர்கள், கடந்த மாதம், 11 செப்டம்பர் 2024 புதன்கிழமை அன்று, பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்டனர் . அவர்களை மீட்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தார் கோரிக்கை வைத்தனர் . அதனை தொடர்ந்து பாரதி தமிழ் சங்க நிறுனவர் முகமது ஹுசைன் மாலிம் மீனவர்கள் பற்றிய முழு விபரத்தையும் சேகரித்து இந்திய தூதரும், அதிகாரிகளும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தை நாடினர்.
இந்நிலையில் நீதிமன்றம் அம்மீனவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது . இதனை இரத்து செய்ய கோரி பாரதி தமிழ்சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று இந்திய தூதரக அதிகாரிகள் மேல் முறையீடு செய்து உள்ளனர்.
- நமது செய்தியாளர் முகமது ரஹ்மத்துல்லா
Advertisement