/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைன் மாணவர் வழிகாட்டுதல் மன்றம் சார்பில் ஆசிரியர் தினம், மீலாது நபி, ஓணம்
/
பஹ்ரைன் மாணவர் வழிகாட்டுதல் மன்றம் சார்பில் ஆசிரியர் தினம், மீலாது நபி, ஓணம்
பஹ்ரைன் மாணவர் வழிகாட்டுதல் மன்றம் சார்பில் ஆசிரியர் தினம், மீலாது நபி, ஓணம்
பஹ்ரைன் மாணவர் வழிகாட்டுதல் மன்றம் சார்பில் ஆசிரியர் தினம், மீலாது நபி, ஓணம்
செப் 07, 2025

மனாமா: மாணவர் வழிகாட்டுதல் மன்றம் (SGF), சார்பில் ஆசிரியர் தினம், மீலாது நபி மற்றும் ஓணம் ஆகியவற்றை இணைத்து, முப்பெரும் விழாவாக கொண்டாடினர்.
பஹ்ரைனில் உள்ள KCA மண்டபத்தில் நடந்த சமூக நிகழ்வை ஆசிரியர்கள், மாணவர்கள், கலாச்சார கலைஞர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை ஒன்றிணைத்தது பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் கல்விக்கு ஒரு அர்த்தமுள்ள நிகழ்வாக அமைந்தது.
இந்த நிகழ்வை கேரள சமூக மற்றும் கலாச்சார சங்கத்தின் தலைவர் ராஜேஷ் நம்பியார் தொடங்கி வைத்தார். ஓணம் பிரதிபலிக்கும் ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் மதிப்புகளை எடுத்துரைக்கும் இதயப்பூர்வமான ஓணப் பண்டிகை செய்தியை வழங்கினார்.
இஸ்லாமிய அறிஞரும் சமஸ்தா கேரள சன்னி ஜமாஅத்தின் தலைவருமான ஃபக்ருதீன் கோயா தங்கள் சிறப்புரையாற்றினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை, போதனைகள்,
ஒழுக்கமான மற்றும் முற்போக்கான சமுதாயத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை அவர் விளக்கி எடுத்துரைத்தார். மீலாது நபியின் ஆன்மிக முக்கியத்துவத்தையும் ஆசிரியர்களின் வழிகாட்டும் பங்கையும் எடுத்துரைத்தார். மாணவர் வழிகாட்டுதல் மன்றத் தலைவர் ஆபிரகாம் ஜான் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, SGF இன் நோக்கத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் ஒன்றாக முன்னெடுத்துச் செல்ல சமூகத்துக்கு அழைப்பு விடுத்தார்.
60 ஆசிரியர்களுக்கு கவுரவம்
கேரள கத்தோலிக்க சங்கத்ததலைவர் ஜேம்ஸ் ஜான்,பஹ்ரைன் கேரள சமாஜத்தின் பொதுச் செயலாளர் வர்கீஸ் கரக்கல் மற்றும் இந்தியன் ஸ்கூல் செயற்குழு உறுப்பினர் பிஜு ஜார்ஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 60 ஆசிரியர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மலர்ச்செண்டுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
சமூகத்தின் ஒற்றுமை
ஆசிரியர் சமூகத்தின் சார்பாக ஆசிரியர் விஜய் குமார் உரையாற்றினார். கேரள கத்தோலிக்க சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் சையத் ஹனிஃப் வரவேற்புரையாற்றினார். கேரள கத்தோலிக்க சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆதரவிற்கு டாக்டர் ஸ்ரீதேவி ராஜன் நன்றி தெரிவித்தார். பீனிக்ஸ் கலாச்சார மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சமூக தலைவர்கள் மோனி ஓடிகண்டத்தில், ஹரிஷ் நாயர், வேணுகோபால், ஜான் ஹென்றி, அனஸ் ரஹீம், தாமஸ் பிலிப், அன்வர் சூரநாடு, சினி ஆண்டனி, விஜய் குமார், சேவி மாத்துண்ணி, வினு கிறிஸ்டி, ஜின்ஸ் ஜோசப், ஷாஜி பொழியூர், லிஜோ பிரான்சிஸ் உட்பட
பல சமூகத் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, பஹ்ரைனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒற்றுமையையும் ஆதரவையும் வலுப்படுத்தினர்.
SGF உறுப்பினர்களின் கண்கவர் கலாச்சார நிகழ்ச்சிகள், ஓணம் மற்றும் மீலாது நபி கருப்பொருள்களை கருத்தாக வைத்து கலை மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளை கொண்டாடினர்.
'ரப்பர் பேண்ட்' குழுவினரின் அற்புதமான நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. நிகழ்ச்சிக்குப் பிறகு, கேரளாவின் வளமான சமையல் கலாச்சாரத்தையும், பண்டிகைக் காலப் பகிர்வு உணர்வையும் பிரதிபலிக்கும் ஓண விருந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீதேவி ராஜன் தலைமையில், பபினா, ரெஜினா இஸ்மாயில், லிபபி ஜைசன் மற்றும் டாக்டர் நினு ஆகியோர் அடங்கிய குழு மிக நுணுக்கமாக ஒருங்கிணைத்தது.
ஆபிரகாம் ஜான் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலில் சையத் ஹனீஃப்
பாபு குஞ்ஞி ராமன், ரிச்சர்ட் கே.இ., ஜைசன், போனி வர்கீஸ் மற்றும் தாமஸ் பிலிப் ஆகியோருக்குமூன்று நாட்களில் நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்கு விழாவின் தொகுப்பாளர் பாபினா நன்றி தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர் ரெஜினா இஸ்மாயில், நிகழ்வை வெற்றிகரமாக்கிய அனைத்து தலைமை விருந்தினர்கள், விருந்தினர்கள், கலைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்க நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
--- நமது செய்தியாளர் காஹிலா .
Advertisement