/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பெனாஸில் ஷிப்னா எழுதிய நூல் வெளியீட்டு விழா
/
பெனாஸில் ஷிப்னா எழுதிய நூல் வெளியீட்டு விழா
ஜூன் 13, 2024

ஸ்கை தமிழ் பதிப்பகம் வெளியீட்டில் பெனாஸில் ஷிப்னா எழுதிய மௌன மொழிகள் நூல் வெளியீட்டு விழா இணையதள வாயிலாக நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக ஏ.சீ அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டதுடன் விசேட விருந்தினர்களாக கண்டி பதியுதீன் முகமது மகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற உயர்தர பிரிவு பிரதி அதிபர் ஏ.யு.எல்.எஸ்.அரஃபா, அலிகார் தேசிய பாடசாலை முன்னாள் பிரதி அதிபர் எப்.டபிள்யூ.எம்.நசீர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நூல் வெளியீட்டு விழாவை துணிந்தெழு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஷிஹானா நௌபர், ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் வழிகாட்டுதலின் கீழ் நெறிப்படுத்தியிருந்ததுடன் நடைபெற்றது.
இலக்கிய ஆர்வலர்கள், நூலாசிரியரின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். இந்நூலானது ஸ்கை தமிழ் பதிப்பகம் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை இணைந்து வெளியிடும் பத்தாவது நூல் வெளியீடு என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
- தினமலர் வாசகர் ஜே.எம்.பாஸித்
Advertisement