
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத்தில் இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தையொட்டி பிரவசந்த்ரா ரெட்டி சங்கத்தின் சார்பில் ஜப்ரியா பகுதியில் உள்ள மத்திய ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடந்தது.
இந்த முகாமில் பங்கேற்றவர்களை இந்திய தூதரக சமூக விவகாரத்துறை அதிகாரி ஹரித் செலத் வாழ்த்து தெரிவித்தார். 50 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement