/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
உம் அல் குவைனில் தூய்மை பணி முகாம்
/
உம் அல் குவைனில் தூய்மை பணி முகாம்

உம் அல் குவைனில் தூய்மை பணி முகாம்உம் அல் குவைன் : அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராசல் கைமா மற்றும் புஜேரா ஆகிய ஏழு அமீரகங்கள் இணைந்ததே ஐக்கிய அரபு அமீரகம் ஆகும்.
இதில் உம் அல் குவைன் அமீரகத்தில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் 24வது ஆண்டாக அமீரக பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து தூய்மை பணி முகாம் நடந்தது.
முகாமுக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார்.
முகாமில் 890 பேர் பங்கேற்று 2,700 கிலோ கிராம் குப்பைகளை சேகரித்தனர்.
அமீரக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஹிபா அல் செஹ்ஹி உள்ளிட்டோர் பங்கேற்று முகாமில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
உம் அல் குவைன் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையினரும் இந்த முகாம் சிறப்புடன் நடக்க தேவையான ஆதரவை வழங்கியிருந்தனர்.
---- நமது தினமலர் வாசகர் சிதம்பரம்
Advertisement

