/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாய் இலங்கை துணைத் தூதரகத்தில் உதவிப் பொருட்கள் சேகரிப்பு
/
துபாய் இலங்கை துணைத் தூதரகத்தில் உதவிப் பொருட்கள் சேகரிப்பு
துபாய் இலங்கை துணைத் தூதரகத்தில் உதவிப் பொருட்கள் சேகரிப்பு
துபாய் இலங்கை துணைத் தூதரகத்தில் உதவிப் பொருட்கள் சேகரிப்பு
டிச 08, 2025

துபாய்: இலங்கை நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் துபாய் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் சேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது உதவிகளை பல்வேறு வகைகளில் வழங்கி வருகின்றனர்.
இந்த பொருட்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு கார்கோ மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்த நாட்டு அரசு மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. உதவிப் பொருட்களை வழங்கி அனைவருக்கும் இலங்கை துணைத் தூதரகம் தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement