
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்: குவைத் இந்திய வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் அமைப்பின் சார்பில் இசை நிகழ்ச்சி ஜாபர் அல் அஹமது கலாச்சார மையத்தில் நடந்தது. இந்திய வயலின் கலைஞர் டாக்டர் எல் சுப்ரமணியனின் இசை நிகழ்ச்சி நடந்தது. டான்மை போஸ் தபேலாவும், ரமண மூர்த்தி மிருதங்கமும் வாசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா கலந்து கொண்டு டாக்டர் எல் சுப்ரமணியனின் இசை சேவைக்கு பாராட்டு தெரிவித்தார். பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement