/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் தூதரக சேவை சிறப்பு முகாம்
/
கத்தாரில் தூதரக சேவை சிறப்பு முகாம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா : கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள ஆசிய நகரத்தில் செயல்பட்டு வரும் இமாரா சுகாதா சேவை மையத்தில் தூதரக சேவைக்கான சிறப்பு முகாம் நடந்தது. அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் பொதுமக்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தல், அட்டஸ்டேசன் உள்ளிட்ட 139 தூதரக சேவைகளை பெற்றனர்.
இந்த சிறப்பு முகாம் தங்களுக்கு மிகவும் உதவியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்றி கூறினர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement