/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாதில் புலம்பெயர்ந்த இந்திய மாநிலங்களின் கலாச்சார விழா
/
ரியாதில் புலம்பெயர்ந்த இந்திய மாநிலங்களின் கலாச்சார விழா
ரியாதில் புலம்பெயர்ந்த இந்திய மாநிலங்களின் கலாச்சார விழா
ரியாதில் புலம்பெயர்ந்த இந்திய மாநிலங்களின் கலாச்சார விழா
அக் 29, 2024

சவுதி அரேபியா இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த புலம்பெயர்ந்த இந்திய மாநிலங்களின் கலாச்சார விழாவில் (Pravasi Parichay-2024) தமிழ்நாட்டின் சார்பாக ”தமிழ் கலாச்சாரத்தின் பயணம் ” என்ற கருவை மையமாக கொண்டு சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர்கள் கலந்து கொண்டனர்:
சென்ற ஆண்டை போல், இந்த வருடமும் சவுதி அரேபியா இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த புலம்பெயர்ந்த இந்திய மாநிலங்களின் கலாச்சார விழா 25-10-2024, வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணி அளவில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்றது.
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்,' என்பதை மெய்ப்பிக்கும் விதமாக “தமிழ் கலாச்சாரத்தின் பயணம்” என்ற கருவை மையமாக கொண்டு, தமிகத்தின் கலாச்சாரத்தை பறைசாற்றும் பறை இசை, நடனம், சிலம்பம், வீணை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் உட்புற அரங்கில் நடைபெற்றது.
தமிழ் கலாச்சாரத்தின் பயணம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு வெளிப்புற அரங்கு வடிவமைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின்:
- வழிபாட்டு தலங்கள்
- கலாச்சாரம்
- சின்னங்கள்
- உணவுகள்
- தமிழ் புத்தக கண்காட்சி
- கைவினைப்பொருட்கள் கண்காட்சி
- கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி பேனர்கள்
வெளிப்புற அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.
தமிழகத்தின் விருந்தோம்பல், ஒருங்கிணைப்பு, மகிமையை அனைத்து மாநில மக்கள் வியக்கும் வகையில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டது.
இச்சிறப்பு நிகழ்வை அகில இந்திய வழிகாட்டல் குழுவின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முஹைதீன் சலீம் மற்றும் இம்தியாஸ் அஹமது சிறப்பாக ஒருங்கிணைத்து, வழிநடத்தி அனைவரும் வியக்கும் வண்ணம், நிகழ்ச்சியை வெற்றி பெற வைத்தார்கள் என்றால் மிகையாகாது.
தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளை ரியாத்திலுள்ள தமிழ் உணவகங்கள் தம்பிஸ், சோழா, பொன்னுசாமி, கிராண்ட் லக்கி உள்ளிட்ட உணவகங்களும் அமைப்புகளும் எல்லோருக்கும் வழங்கி தமிழர்களின் விருந்தோம்பலை பறைசாட்டினர்.
இந்நிகழ்வில் அனைத்து ரியாத் தமிழ் அமைப்பின் பிரதிநிதிகள், தமாம், ஜித்தா தமிழ்ச்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நிகழ்வுகள் மற்றும் பெவிலியன் ஆகிய இரண்டிலும் சிறந்து, தனித்து நின்று பாராட்டுகளை பெற்றதுடன் . இனிவரும் நிகழ்வுகளில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒரே தமிழ் சமூகமாக நின்று இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தியதை வந்திருந்த அண்டை மாநிலத்து உறவுகளும் தூதரக அதிகாரிகளின் வார்த்தைகளும் உறுதி படுத்துவதாகவும் பங்கு பெற்ற அனைவரையும் மேலும் ஊக்கம் படுத்துவதாகவும் இருந்தது.
நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்கள், தூதரக அதிகாரிகள் நிகழ்ச்சியில் இறுதிவரை இருந்து இரவு சுமார் 11:30 மணி அளவில் தேசிய கீதம் பாடலைப் பாடி மகிழ்ச்சியாக அனைவரும் கலைந்து சென்றனர். தகவல்: -முஹைதீன் சலீம், கருவூல உலக நிதிச் சந்தை துணை பொது மேலாளர், அரபு நேஷனல் வங்கி, ரியாத்
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement