/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜிசான் தமிழ்ச் சங்கம் சார்பில் தீபஒளி திருநாள் கொண்டாட்டம்
/
ஜிசான் தமிழ்ச் சங்கம் சார்பில் தீபஒளி திருநாள் கொண்டாட்டம்
ஜிசான் தமிழ்ச் சங்கம் சார்பில் தீபஒளி திருநாள் கொண்டாட்டம்
ஜிசான் தமிழ்ச் சங்கம் சார்பில் தீபஒளி திருநாள் கொண்டாட்டம்
அக் 27, 2025

ஜிசான் தமிழ்ச் சங்கம் சார்பில்தீபஒளி திருநாள் கொண்டாட்டம்
கடந்த 24.10.2025, வெள்ளிக்கிழமை, ஜிசான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தீபஒளி திருவிழா மிக சிறப்பாகவும் மகிழ்ச்சி கரமாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதன் பின்னர் ஆண்டனி பிரபு வரவேற்றார். பின்னர் பேராசிரியர் அ.க. கருணாமூர்த்தி, ஜிசான் தமிழ்ச் சங்கத்தின் நோக்கம் மற்றும் எதிர்கால செயல்பாடுகளுக்கான திட்டமிடலின் அவசியத்தைப் பற்றி விரிவாக விளக்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜலா மலையாள சங்கத்தின் சார்பில் தாகா கொல்லேட் மற்றும் பேராசிரியர் ரமேஷ் மூச்சிக்கல், அசீர் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆனந்த தேவதுரை மற்றும் பேராசிரியர் நூஹு அப்துல்லா கான் (UTS Core Team Members, மற்றும் NRT துணைப்பொறுப்பாளர் ), KMC மலையாள சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல் கபூர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து தமிழ்க் குழந்தைகளின் ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர் சங்கத்தின் மூத்த முன்னோடிகள் அண்ணாதுரை, ரியாஸ், மாரி, கலைச்செல்வன், கணேசன் சரவணன் (பாபு), அலாவுதீன் மற்றும் முனுசாமி ஆகியோரை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் ராஜன் ஜோஸ், ஜெயபிரபு, ஜான் மார்ட்டின், சரவணன், அன்சாரி, ராஜன் பலராமன் ஆகியோர் கௌரவித்தனர். பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார்.அனைவருக்கும் பல்வேறு சுவையான இரவு உணவுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை டாக்டர்கள் ரம்யா மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நிகழ்வில் பல்வேறு ஊர்களில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு உறவாடி மகிழ்ந்தனர். - ஜெத்தாவில் இருந்து நமது செய்தியாளர் எம்.சிராஜ்
Advertisement

