/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாத்தில் தமிழருக்கு கிழக்கு மண்டல அயலக அணியின் உதவி.
/
ரியாத்தில் தமிழருக்கு கிழக்கு மண்டல அயலக அணியின் உதவி.
ரியாத்தில் தமிழருக்கு கிழக்கு மண்டல அயலக அணியின் உதவி.
ரியாத்தில் தமிழருக்கு கிழக்கு மண்டல அயலக அணியின் உதவி.
ஜூலை 05, 2025

தமிழ்நாடு கள்ளக்குறிச்சி சேர்ந்த முனுசாமி மாரிமுத்து சமையல் பணியில் இருந்த நிலையில் கடந்த 11.02.2025 முதல் வேலை இழந்து, அதனால் அவரது குடும்பம் பெரும் துன்பத்தில் இருந்தது.
NRTIA - Riyadh Chapter சார்பாக, இந்திய தூதரகத்தின் தொழிலாளர் நலத் துறையின் பரிந்துரையின் கீழ் முனுசாமியின் இறுதி வெளியேற்றம் (Final Exit) ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், தூதரகத்தின் உதவியுடன் இறுதி வெளியேற்ற ஆவணங்கள் 02.07.2025 அன்று வழங்கப்பட்டன.
NRTIA - Riyadh Chapter (அயலக அணி) சந்தோஷ் பிரேம் தன் சொந்த செலவில்  விமான பயண டிக்கெட் வழங்கி 15.07.2025 அன்று அவர் தாயகம் செல்வதற்கு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தி.மு.க அயலக அணி, சவூதி அரேபியா - ரியாத் அமைப்பாளர்: சந்தோஷ் பிரேம், ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன், ரியாத் மண்டல தலைவர் ஐயப்பாடி ஜாக்ரி உசேன், துணை அமைப்பாளர்கள் வாசிம் ராஜா, அப்துல் ரஹ்மான் மேலும், அனைத்து NRTIA Riyadh Chapter உறுப்பினர்களும் இணைந்து முனுசாமியின் தாய் நாட்டு பயணத்திற்கு ஒத்துழைத்தனர்.
குறிப்பாக சென்னை NRT தலைமையகம் புலம்பெயர் தமிழர்களின் மறுவாழ்வு நல ஆணையர் மற்றும் ரியாத் இந்திய தூதரக அதிகாரிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் மிகவும் பாராட்டப்பட வேண்டியது.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement

