/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஓமனில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்
/
ஓமனில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்

மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 10.04.2024 புதன்கிழமை காலை ஈகைத் திருநாளையொட்டி பள்ளிவாசல்கள், மைதானங்களில் சிறப்பு தொழுகை பாரம்பரிய முறைப்படி நடந்தது. இந்த தொழுகைகளில் ஓமன் நாட்டினர் உள்ளிட்ட இந்தியர்கள், பங்களாதேஷ் நாட்டினர், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் பங்கேற்றனர்.
தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவியும், கை கொடுத்தும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பெருநாளை முன்னிட்டு சிறுமிகள் உள்ளிட்ட பெண்கள் கைகளில் மெஹந்தி உள்ளிட்ட வர்ணம் பூசுவதில் ஆர்வம் காட்டினர். பெருநாள் தினத்தில் மாலை குதிரை பந்தயம் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement