sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ரியாத்தில் தமிழ் குத்பா உரையுடன் நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

/

ரியாத்தில் தமிழ் குத்பா உரையுடன் நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

ரியாத்தில் தமிழ் குத்பா உரையுடன் நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

ரியாத்தில் தமிழ் குத்பா உரையுடன் நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை


மார் 22, 2026

Google News

மார் 22, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், கடந்த 20 மார்ச் 2026 வெள்ளிக்கிழமை அன்று, பத்ஹா தாவா வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில், ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை தமிழ் உரையுடன் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. ரியாத் எக்சிட் 18-இல் அமைந்துள்ள இஸ்திராஹா திடலில் நடைபெற்ற இந்தத் தொழுகையில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்பங்களுடன் கலந்துகொண்டனர்.

சரியாக காலை 6:15 மணிக்கு ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது,அதனை தொடர்ந்து மவ்லவி M.M. நூஹ் அல்தாஃபியின் பெருநாள் குத்பா சிறப்புரை தமிழில் நடைபெற்றது. புலம் பெயர்ந்த மண்ணில் இருந்தாலும், நம் தாய்மொழியில் மார்க்க உபதேசங்களைக் கேட்பது அங்கு கூடியிருந்த மக்களிடையே ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எனத் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


ஈத் பெருநாள் தொழுகைக்குப் பின், மக்கள் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி பகிர்ந்து கொண்டனர்.குறிப்பாக, வெளிநாட்டில் வசிக்கும் நமது தமிழ் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில், அதுவும் ஒரு பண்டிகை நாளில் ஒன்று கூடியது காண்பதற்கு மிக அழகாக இருந்தது. இந்தச் சந்திப்பு அங்கு நிலவிய சகோதரத்துவத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு சொந்த ஊரில் கொண்டாடுவதைப் போன்ற உணர்வை அனைவருக்கும் தந்தது என்றால் அது மிகை அல்ல.


இந்தத் தொழுகைக்கான முன்னேற்பாடுகளை பத்ஹா தாவா வழிகாட்டல் நிலையத்தின் உறுப்பினர்களும், தன்னார்வலர்களும் முன்னின்று கவனித்தனர்.


- நமது வாசகர் ஆரிப் அப்துல் சலாம்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us