
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனாமா: பஹ்ரைனில் பல்வேறு இடங்களில் உள்ள 100 குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு மதிய உணவுப் பெட்டிகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகளை ஈத் பெரூநாள் தினத்தில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவிக் குழு விநியோகித்தது. குறைந்த வருமானம் பெறுபவர்களும் ஈத் பண்டிகையை அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடிட ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இது அமைந்தது.
'லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவிக் குழுவின்' 'ரீச் தி அன் ரீச்ட்' முயற்சியின் ஒரு பகுதியாகும். லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் பிரதிநிதிகளான சையத் ஹனீஃப், மஜாருதீன், அஜித் கிருஷ்ணன் மற்றும் முகமது யூசுப் ஆகியோர் விநியோகத்தில் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement