sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

இந்திய வெளியுறவு அதிகாரிக்கு பிரிவுபசாரம்

/

இந்திய வெளியுறவு அதிகாரிக்கு பிரிவுபசாரம்

இந்திய வெளியுறவு அதிகாரிக்கு பிரிவுபசாரம்

இந்திய வெளியுறவு அதிகாரிக்கு பிரிவுபசாரம்


டிச 18, 2025

Google News

டிச 18, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய வெளியுறவு அதிகாரிக்கு பிரிவுபசாரம்
ஜெத்தா: ஜெத்தாவில் செயல்படும் பல்வேறு இந்திய சமூக மற்றும் தொழில்முறை அமைப்புகள், இந்திய துணைத் தூதரகத்தின் (வணிகம், ஊடகம், தகவல் & பண்பாடு) கன்சலாக பணியாற்றிய முகமது ஹாஷிம் சவுதி அரேபியாவில் தனது பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதை முன்னிட்டு அவருக்கு விடைபெறல் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிகளை இந்திய வணிக மற்றும் தொழில்முறை வலையமைப்பு (IBPN), SIGN சைன், இந்தியா குளோபல் நெட்வொர்க், இந்திய ஸ்டீரிங் கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் பெருமையுடன் நடத்தின. இந்திய புலம்பெயர் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களிடையே அவர் பெற்ற மதிப்பும் மரியாதையும், சமூகத்துடன் அவர் ஏற்படுத்திய நெருக்கமும், அவரது சேவைக்கு கிடைத்த பரந்த மற்றும் ஆழமான பாராட்டையும் இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்தின.
தனது பதவிக்காலத்தில், ஹாஷிம் வர்த்தகம் மற்றும் வணிகம் ஊக்குவித்தல், ஊடகம் மற்றும் தகவல் தொடர்புகள் வலுப்படுத்தல், பண்பாட்டு பரிமாற்றங்களை வளர்த்தல், துணைத் தூதரகத்துக்கும் சமூகத்திற்கும் இடையே பாலமாக செயல்படுதல் ஆகிய அனைத்திலும் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். இந்திய தொழில் முனைவோர், நிபுணர்கள், வணிகக் குழுக்கள் மற்றும் அடித்தள முயற்சிகளுக்கு வழிகாட்டுதலும் ஊக்கமும் வழங்கி அவர் துணை நின்றார். அவரது விடாமுயற்சியின் மூலம், இந்திய சமூகத்திற்கு வாய்ப்புகள் விரிவடைந்ததுடன், இந்தியா-சவூதி அரேபியா இடையிலான பொருளாதார மற்றும் பண்பாட்டு உறவுகளும் சிறப்படைந்தது .
சமூகத்துடன் நடைபெற்ற தனது உரையாடல்களில், ஜெத்தாவில் இந்திய புலம்பெயர் சமூகத்தினர் வழங்கிய உறுதியான ஆதரவுக்கு கன்சல் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.
- ஜெத்தாவில் இருந்து நமது செய்தியாளர் எம்.சிராஜ்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us