sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

/

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்


மே 24, 2025

Google News

மே 24, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனாமா: மனித நேய கலாச்சார பேரவை பஹ்ரைன் மண்டலம், அல் ஹிலால் பல்நோக்கு மருத்துவமனை, அத்லியா கிளையுடன் இணைந்து நடத்திய மே தின இலவச மருத்துவ முகாம் செயலாளர் மன்னை அலி தலைமையில் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மருத்துவ முகாமில், இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம், கல்லீரல் செயல்பாடு, சிறுநீரக செயல்பாடு, மொத்த கொலஸ்ட்ரால், யூரிக் அமிலம் ஆகியவை பரிசோததிக்கப்பட்டன. காலை 7 மணியளவில் பரிசோதனை துவங்கப்பட்டு மதியம் 12 மணியளவில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தண்ணீர் மற்றும் பழரசம் வழங்கப்பட்டது. அன்றே பரிசோதனை அறிக்கையும் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்று இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.


Er. ஹபிபுல்லா வரவேற்புரை வழங்கினார். நூர் மஸ்தான், ஜமால் காதர், நவாஸ் அஹமது, ஷகிலா பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.பாத்திமா நுஸ்ரா, ஹூருல் பிர்தௌஸ், துர்கா தேவி, ஐயப்பன், ஹாஜா, ஆரிப், முஜிபுர் ரஹ்மான் மற்றும் வல்லம் இக்பால், புகைப்படக் கலைஞர் யூசுப் ஷா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மனித நேய கலாச்சார பேரவை சார்பாக அல் ஹிலால் மருத்துவமனைக்கு அத்லியா கிளைக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பொது மருத்துவர் Dr. P.K.சௌத்ரி இந்நிகழ்வைச் சிறப்பித்துடன், வர்த்தக நிபுணர் அமல் பாலச்சந்தர், சிறப்பு விருந்தினர்கள் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்க நிறுவனர் சையது ஹனீப், பாரதி தமிழ் சங்கத் தலைவர் வல்லம் பஷீர் ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.


அயலக அணி(NRTIA) செயலாளர்கள் சதீஷ் குமார், இஸ்மாயில், சுல்தான் இப்ராஹிம்,முபாரக் சுலைமான், முஹ்யித்தீன் மற்றும் ஒன்றிய செயலாளர் பிரபா, டிஸ்கவர் இஸ்லாம்- அன்வர் தீன் மற்றும் முஹமது இத்ரீஸ், நிகழ்ச்சி ஆதரவாளர் பெஸ்ட் லைன் லாஜிஸ்டிக்ஸ் W.L.L ஹாஜா, ஊடகச் செயலாளர் ஹூருல் பிர்தௌஸ் ஆகியோரும் பங்கேற்றனர். குடந்தை நவாஸ் அஹமது நன்றியுரை வழங்கினார்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us