அக் 21, 2026

துபாயில் கிரீன் குளோப் விழிப்புணர்வு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
துபாய் பொது நூலகத்துடன் (Dubai Public Library) இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல், ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்துதல் மற்றும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் ஆதரவும் அளித்தல் ஆகியவையாகும்.
இதன் ஒரு பகுதியாக, குழந்தைகள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டிகளை (A3 அளவு) தயாரித்து வழங்க ஊக்குவிக்கப்படுகின்றனர். பங்கேற்கும் குழந்தைகளுக்கு சான்றிதழ்களும், வெற்றியாளர்களுக்குச் சிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்படும் என கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபுபக்கர் தெரிவித்தார்.
நிகழ்ச்சி விவரங்கள்:
தேதி: அக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமைநேரம்: மாலை 3.00 மணி முதல் இரவு 9.30 மணி வரைஇடம்: ஹோர் அல் அன்ஸ் நூலகம் (Hor Al Anz Library), துபாய்சுவரொட்டி சமர்ப்பிக்கும் இறுதி நேரம்: பிற்பகல் 1.00 மணி“ஆரோக்கியமான நாளைக்காக ஒன்றிணைவோம்” என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்நிகழ்ச்சி, புற்றுநோய் விழிப்புணர்வை சமூகத்தில் பரப்பவும், ஆரம்பகாலப் பரிசோதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு +971 50 216 5838 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
-- நமது வாசகர் ரசூல்
Advertisement

