
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டு வரும் கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி ஹரி செலத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தின் சிறப்பான பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார் 500 க்கும் அதிகமானோர் இந்த இஃப்தார் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement