
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத் இந்திய முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் மீலாதுப் பெருவிழா 19.09.2024 அன்று மஸ்ஜித் யூசுப் அல் அத்சானியில் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் நடந்தது. தல்கா அப்துல் பர் இறைவசனங்களை ஓதினார்.
சங்க தலைவர் உமர் பலாஹி தலைமையுரை நிகழ்த்தினார். இந்த விழாவில் மௌலவி நிசார் அஹமது சிறப்புரை நிகழ்த்தினார். அவர் நபிகளாரின் சிறப்புக்கள் குறித்து விவரித்தார். வர்த்தக பிரமுகர் முசம்மில் மாலிக் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement