/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா ஈக்வெஸ்ட்ரியன் கிளப்பில் இந்திய கலை இரவு நிகழ்ச்சி
/
ஜெத்தா ஈக்வெஸ்ட்ரியன் கிளப்பில் இந்திய கலை இரவு நிகழ்ச்சி
ஜெத்தா ஈக்வெஸ்ட்ரியன் கிளப்பில் இந்திய கலை இரவு நிகழ்ச்சி
ஜெத்தா ஈக்வெஸ்ட்ரியன் கிளப்பில் இந்திய கலை இரவு நிகழ்ச்சி
ஜூலை 31, 2024

ஜெத்தா சீசன் 2024 சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜெத்தா ஈக்வெஸ்ட்ரியன் கிளப்பில் இந்திய கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் பிரசித்தி பெற்ற இசை கலைஞர்கள் கவுஹர் கான், தப்ஸி, சல்மான் அலி, நிகிதா காந்தி கலந்து கொண்டு ரசிகர்களை இசை வெள்ளத்தில் நனைய வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சவுதி அரேபியா முக்கிய பிரமுகர்கள், ஊடகப் நண்பர்கள், சமுதாய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு இந்திய அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பாடகர் சல்மான் அலி தனது சக்தி வாய்ந்த குரலால் பார்வையாளர்களை கவர்ந்தார், அதேபோல் தனது பிரபலமான பாலிவுட் பாடல்களால் நிகிதா காந்தி பார்வையாளர்களை குதூகலப்படுத்தினார். கேரளாவைச் சேர்ந்த ராப்பர் டாப்சி, தனது பாடல்களால் கூட்டத்தை கவர, பிறகு மேடையை விட்டு கீழே இறங்கி சிறுவர்களுடன் சேர்ந்து பாடி , பார்வையாளர்களை நடனமாட ஊக்குவித்தார்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் நேபாளம் ஆகிய ஏழு ஆசிய நாடுகளின் மாறுபட்ட கலாச்சாரங்களை கொண்டாடும் விழாவின் ஒரு பகுதியாக இந்த இன்னிசை இரவு நடைபெற்றது. ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆகஸ்ட் 16 வரை வெவ்வேறு ஆசிய கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
- நமது செய்தியாளர் M சிராஜ்
Advertisement