/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் இந்திய ஜூனியர் ஹாக்கி பெண்கள் அணிக்கு வரவேற்பு
/
மஸ்கட்டில் இந்திய ஜூனியர் ஹாக்கி பெண்கள் அணிக்கு வரவேற்பு
மஸ்கட்டில் இந்திய ஜூனியர் ஹாக்கி பெண்கள் அணிக்கு வரவேற்பு
மஸ்கட்டில் இந்திய ஜூனியர் ஹாக்கி பெண்கள் அணிக்கு வரவேற்பு
டிச 14, 2024

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்திய ஜூனியர் ஹாக்கி பெண்கள் அணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிய கோப்பை ஜூனியர் பெண்கள் பிரிவு கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்க இந்திய அணி மஸ்கட் சென்றனர். அவர்களுக்கு இந்திய அணிக்கு இந்திய தூதரகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்திய தூதரகத்தில் சிறப்பு வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். அவர் இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணியின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டினார். மேலும் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement