/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரெட் சீ திரைப்பட விழா 2025-ல் இந்திய இரவு
/
ரெட் சீ திரைப்பட விழா 2025-ல் இந்திய இரவு
டிச 13, 2025

உலகளாவிய மேடையில் இந்தியாவின் பண்பாட்டு பிரகாசத்தை கொண்டாடிய பெருமைக்குரிய தருணமாக, ஜெத்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 2025 டிசம்பர் 08 அன்று, புகழ்பெற்ற பார்க் ஹயட் ஹோட்டலில் நடைபெற்ற ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா 2025 உடன் இணைந்து, பிரமாண்டமான இந்திய இரவு விழாவை நடத்தியது. இந்த நிகழ்வு , இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே வளர்ந்து வரும் நட்புறவையும், திரைப்படத் துறையில் உருவாகும் வலுவான கூட்டாண்மையையும் பிரதிபலித்தது டன், படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் பண்பாட்டு ஒற்றுமை ஆகியவற்றில் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் பார்வையை வெளிப்படுத்தியது.
இந்த நிகழ்வில் சிறப்புமிக்க விருந்தினர்கள், திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் ஒன்று கூடியது அனைவரையும் ஊக்கமூட்டியது. சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் டாக்டர் சுஹேல் அஜாஸ் கான், ஜெத்தாவில் உள்ள இந்திய துணைத் தூதர் ஃபஹத் அகமது கான் சூரி ஆகியோரின் சிறப்பான பங்கேற்பு, நிகழ்வுக்கு பெருமையும் மரியாதையும் சேர்த்தது.
உம்ராவ் ஜான் திரைப்படத்தின் பின்னணி சிந்தனையாளரான இயக்குநர் முசாபர் அலியின் வருகை நிகழ்வை மேலும் சிறப்பித்தது. ஷிவானி காஷப் மற்றும் அமான் சப்ரி ஆகியோரின் மனதை மயக்கும் இசை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள், இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலித்து, பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தன.
துணைத் தூதர் ஃபஹத் சூரியின் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழ், சமூக உறுப்பினர்களான ஆசாத் அலி, பிரதீப் சர்மா மற்றும் அவர்களின் குழு, கான்சல் ஹாஷிமின உறுதியான ஆதரவுடன்—இந்த நிகழ்ச்சியை மிகுந்த துல்லியமாக வடிவமைத்து அனைவரின் பாராட்டை பெற்றனர்.
இந்த நிகழ்ச்சி இந்தியாவின் கலைப் பாரம்பரியத்தைப் வெளிப்படுத்தியதோடு, இரு மகத்தான நாடுகளுக்கிடையே படைப்பாற்றல் கூட்டாண்மை, பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் திரைப்படத் துறையின் சிறப்புமிக்க வாய்ப்புகள் தொடர்ந்து விரிவடைந்து வருவதை எடுத்துக் காட்டியது.
- ஜெத்தாவிலிருந்து நமது செய்தியாளர் M Siraj
Advertisement

